இலங்கை
Typography

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்குப் போட்டால், அவர் எம்மையும் போட்டுத் தள்ளுவார்.” என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியில் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

வவுனியா, திருநாவற்குளத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மனோ கணேசன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “வாக்களித்த மக்களுக்கு, நியாயத்தை பெற்றுத்தர வேண்டும் என்ற தெளிவான ஒரு நிலைப்பாட்டை கொண்டவரே சஜித் பிரேமதாச. நாட்டிலுள்ள பல பிரச்சினைகளை மாற்றுவதற்கே அவரை ஜனாதிபதியாக்க முயல்கிறோம்.

நாட்டுக்குள், இன, மதவாதம் இருக்க முடியாது. நாம் அனைவரும் நண்பர்கள். ஒரு தாய் பிள்ளைகளாக வாழ வேண்டும். தமிழ் வேட்பாளர்களிற்கு வாக்களிப்பது, தேர்தலை பகிஸ்கரிப்பது, மக்கள் விடுதலை முண்ணனிக்கு வாக்களிப்பது என்பது கோட்டாவை ஆதரிப்பதாகவே அமையும். கோட்டாவுக்கு போட்டால், எம்மை போட்டுவிடுவார். வெள்ளை வான் வரும். கடத்தல் காணாமல் போதல்கள் வரும். எனவே ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டும் என்றால் சஜித்திற்கு வாக்களிக்க வேண்டும்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்