இலங்கை

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பிலான அதிர்ச்சியளிக்கும் உண்மைகள் இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் வெளிவரவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

“இந்தப் படுகொலைகள் நடத்தப்பட்ட விதம் தொடர்பில் நான் கேட்டபோது என்னால் உணவு உண்பதற்கும் முடியாமல் போனது, இதனை பெண்கள் கேட்டிருந்தால் மயக்கமே அடைந்திருப்பார்கள்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் இராணுவ வீரர்களுக்கான கொள்கை வெளியீட்டு நிகழ்வு நேற்றுமுன்தினம் கொழும்பு தாஜ்சமுதிரா ஹோட்டலில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாங்கள் இன்று இராணுவ வீரர்களுக்கான கொள்கையை வெளியிட்டுள்ளோம். ஆனால், சிலர் அரசியல் மேடைகளில் பல்வேறு வாக்குறுதிகளை கொடுக்கின்றனர். அவர்களின் வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கைகளில் மாத்திரமே இருக்கும். தேர்தல் அறிக்கையை தாண்டி நாம் உறுதிமொழியை இன்று வழங்குகிறோம். எமது புதிய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சரான பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவால் இராணுவத்தினருக்கான உறுதிமொழிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.

கடந்த அரசாங்கத்தின் பாதுகாப்புச் செயலாளர் இராணுவத்தினரை பல்வேறு கொலைச் செயற்பாடுகளில் ஈடுபடுத்தியிருந்தார். அதனால் இராணுவத்தினர் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர். அவர்களுக்கு உத்தரவுகளைப் பிறப்பித்தவர்களை நான்கு வருடங்களாக நீதிமன்றங்கள் கண்டுகொள்ளவில்லை. நீதிமன்றங்களுக்குச் சென்ற வழக்குகளின் தீர்ப்புகளை மாற்ற மருத்துவ சான்றிதழ்களை அளித்தனர். முடியாத கட்டத்தில் வெளிநாடுகளுக்குச் சென்றனர். இராணுவத்தினரை காட்டிக்கொடுத்துவிட்டு தப்பியோடியவர்கள் இராணுவத்தினரை கைதுசெய்துள்ளதாக அரசாங்கத்தை விமர்சிக்கின்றனர். கைதுசெய்தது அரசாங்கமல்ல கிடைக்கப்பெற்ற தகவல்களின் பிரகாரம் நீதிமன்றங்களே உத்தரவு பிறப்பித்திருந்தன. இன்னும் இரண்டு மூன்று நாட்களில் பாரிய உண்மைகள் வெளிவரவுள்ளன. அது அவர்கள் காலத்தில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பிலானது. இப் படுகொலையை செய்தவர் நாட்டுக்கு வந்து சென்றுள்ளார்.” என்றுள்ளார்.

 

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 99 பேருடைய கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை ஏகமனதாக தீர்மானித்துள்ளது. 

“விமர்சனங்கள் எல்லாவற்றுக்கும் நாம் பதிலளித்துக்கொண்டிருக்க முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஒற்றுமை மிக அவசியம். சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள எம்.ஏசுமந்திரனின் சிங்கள நேர்காணல் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூடி ஆராயும்.” என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வழிமுறையாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு 4 கட்டங்களாக நீடிக்கப்பட்ட நிலையில் நாளை 31ந் திகதியுடன் அந்த உத்தரவு காலவதியாகிறது.

பிரதமர் நரேந்திர மோடி, தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முதலாம் ஆண்டு நிறைவடைந்ததையொட்டி குடிமக்களுக்கு கடிதம் ஒன்றினை வெளியீட்டுள்ளார்.

அமெரிக்காவில் சமீபத்தில் போலிஸ் விசாரணையின் போது வேண்டுமென்றே கருப்பின இளைஞர் ஒருவர் கொலை செய்யப் பட்டதற்கு நீதி வேண்டி மின்னசோட்டா மாநிலத்தில் கருப்பின மக்களால் பெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்க பட்டு வருகின்றது.

சமீப நாட்களாக இந்தியாவும், சீனாவும் எல்லயில் படைகளைக் குவித்து வருவதுடன் இரு நாட்டுத் தலைவர்களும் உயர் மட்ட இராணுவ அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியும், போருக்கு ஆயத்தமாக இருக்குமாறு சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது நாட்டு இராணுவத்தினருக்குப் பணித்திருப்பதாலும் இரு நாடுகளுக்கு இடையேயும் போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ளது.