இலங்கை

“கோட்டாபய ராஜபக்ஷ எனும் பேராபத்தைக் கடக்க வேண்டுமானால், தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வாக்குரிமை எனும் ஆயுதத்தைப் பயன்படுத்த வேண்டும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

முல்லைத்தீவு - மாங்குளம் பகுதியில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்த தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் நேற்று சனிக்கிழமை கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

எம்.ஏ.சுமந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “தொடர்ந்தும் கொடூரமான குடும்ப ஆட்சியைத் தக்கவைப்பதற்காக, பொதுஜன பெரமுன தரப்பினர் குடும்ப உறுப்பினரான கோட்டாபய ராஜபக்ஷவை இம்முறை களமிறக்குகின்றனர். இந்த வேளையில் இது சிங்கள மக்களுக்கான தேர்தல், சிங்கள தலைவர்களுக்கான தேர்தல் எனவே இந்த தேர்தலை பகிஸ்கரிக்கவேண்டுமென சிலர் கூறுகின்றனர். சிலர் யாருக்கென்றாலும் பறவாயில்லை, வாக்களியுங்கள் என்று கூறுகின்றனர். இவ்வாறன கருத்துக்கள் முற்றிலும் தவறானவை.

எமது குடும்பத்தைக் கொன்றொழித்த ராஜபக்ஷ குடும்பம் எவ்வாறு 2005ஆம் ஆண்டு ஆட்சிபீடம் ஏறியது என்று நாம் பார்க்கவேண்டும். அந்தத்தேர்தலில் எங்களுடைய வாக்களிப்பு தவிர்ப்பினால்தான் ராஜபக்ஷ குடும்பம் ஆட்சிபீடம் ஏறியது. அவர்கள் ஆட்சிபீடம் ஏறி, எமது இனத்தைக் கொன்றொழித்தார்கள், பல படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றன. ஒரு கொடூரமான ஆடசி ஆவர்களுடைய ஆட்சிக்காலத்தில்இடம்பெற்றது.

ராஜபக்ஷ குடும்பம் தமிழ் மக்கள் வேண்டமென ஒதுக்கினார்கள். அவ்வாறு எந்தமக்களை வேண்டாமென ஒதுக்கினார்களோ, அந்த தமிழ் மக்களாலேயே அவர்கள் ஆட்சியிலிருந்து துரத்தப்பட்டார்கள். அவ்வாறு அவர் தோற்கடிக்கப்பட்டபிற்பாடு, நான் ஈழத்தின் வாக்குகளாலேயே தோற்கடிக்கப்பட்டேன் என மஹிந்த ராஜபக்ஷ உரை நிகழ்த்தினார். எங்குடைய ஒரே ஆயுதம் வாக்குரிமையாகும். அதை பகிஸ்கரிக்கவேண்டும், அல்லது அந்த ஆயுதத்தை பாவிக்கக்கூடாதெனக் கூறுவதற்கு எவருக்கும் அருகதையில்லை.

கடந்த 2005ஆம் ஆண்டுத் தேர்தலின்போது ரணில் விக்ரசிங்க எமக்கு சமஸ்டி தருவதாக கூறினார். எனினும் நாம் அந்தத் தேர்தலை நாம் வாக்களிக்காது பகிஸ்கரித்தோம். ஆனால் அந்தக் காலகட்டத்தில் எம்மிடம் ஆயுதபலமிருந்தது. தற்போது அந்த ஆயுதபலமும் எம்மிடமில்லை. வாக்குரிமை என்பது எம்மைப் பாதுகாப்பதற்கான ஆயுதமாகும். அந்த ஆயுதத்தையும் கீழே வைக்கும் படியாக, சிலர் தேர்தலை பகிஸ்கரிக்குமாறு கூறுகின்றனர்.

இந்தத் தேர்தலைப் பொறுத்தவரையிலே 35வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவ்வாறு போட்டியிடுகின்ற வேட்பாளர்களில் ஒருவர் நிச்சயமாக ஜனாதிபதியாக வருவார். தமிழர்கள் வாக்களிக்கவில்லை என்பதற்காக, ஜனாதிபதி தேர்வுசெய்யப்படமாட்டார் என்றில்லை. எனவே தமிழ் மக்களும் வாக்களிக்கவேண்டும்.

கோட்டாபய ராஜபக்ஷ என்பவர், ராஜபக்ச குடும்பத்திலேயே மிகவும் மோசமான ஒருவராவர். கடந்த கால யுத்தமும் அவருடையதுதான். கடந்த காலங்களில் "இது கோட்டாவின யுத்தம்" என்ற நூலும் வெளியிடப்பட்டது. எனவே தமிழ் மக்களாகிய நாம், வாக்களிக்காமல் பகிஸ்கரிப்புச்செய்து அத்தகைய கொடூரமானவர்களை மீண்டும் ஆட்சிபீடம் ஏற்றப்போகின்றோமா?

இந்த தேர்தல் வெள்ளத்தை தடுப்பதற்கு அமைக்கப்டுகின்ற பாதுகாப்பு அணைக்கட்டு போன்றது. எனவே அனைத்து தமிழ் மக்களும் சரியான முறையில் இத்தேர்தலைப் பயன்படுத்த வேண்டும். ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச எமது மக்களுக்கு சார்பான பல வாக்குறுதிகளை அவரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைத்துள்ளார்.

அரசியல்தீர்வு தொடர்பாக, ஒருமித்த பிளவுபடாத நாட்டிற்குள் அதியுச்ச அதிகாரப்பகிர்வு என்று அவர் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதி முன்வைத்துள்ளார். இவ்வாறாக வாக்குறுதி வழங்குவதற்காவது அவருக்கு துணிவிருக்கின்றது.அவ்வாறான தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் வாக்குறுதிகள் எதுவும் கோத்தபாயவினுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் இல்லை. அதற்கான துணிவும் அவரிடம் இல்லை.

நாம் கடந்த ஜனவரியில் அரசியலமைப்புத் தொடர்பில், ஒரு திட்ட வரைபை பாராளுமன்றில் முன்வைத்துள்ளோம். அதை நாம் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தி அந்த விடையத்தை நாம் முழுமையாக்கக்கூடிய சூழ் நிலையும் இருக்கின்றது. சஜித் பிரேமதாசவை வெல்லவைப்பதற்காக அதிகமாக தமிழ் மக்கள் வாக்களிக்கவேண்டும். தமிழ் மக்கள் அனைவரும் ஒருமித்து சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்கவேண்டுமென கோரிக்கையாக கேட்டுக்கொள்கின்றேன்.” என்றுள்ளார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் (வயது 56) சற்றுமுன்னர் (இன்று செவ்வாய்க்கிழமை) காலமானார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவை கைப்பற்றப்போவதாக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் உள்ள பள்ளிகள் காலதாமதமாக திறப்பதால் பாடங்களை குறைக்கத் திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 646 ஆகவும், பலியானவர்களின் எண்ணிக்கை 127 ஆகவும் உயர்ந்துள்ளது. அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது.

Worldometers இணையத் தளத்தின் அதிகாரப்பூர்வ சமீபத்திய தகவல் படி உலகம் முழுதும் 213 நாடுகளில் பரவியிருக்கும் கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முக்கிய புள்ளி விபரம் கீழே :

இந்திய சீன எல்லையான லடாக்கில் மேலும் ஆயிரக் கணக்கான வீரர்களைக் குவித்தும், போர் விமானங்களைத் தரித்தும் வருவதால் சீனா இந்தியா இடையே போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது.