இலங்கை
Typography

“புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியோடு எமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பிப்போம்.” என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

“சஜித் பிரேமதாச வெற்றி பெரும் வரை நாம் ஓய மாட்டோம். காரணம் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மாத்திரம் தான் மலையக மக்களுக்காக ஒரு அத்தியாயம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே சஜித் பிரேமதாச வெற்றியின் பின் தோட்டத்தொழிலாளர்கள் என்ற பெயரை மாற்றி மலையக தமிழ் விவசாயிகள் என்ற அடையாளத்தை நண்பர் சஜித் பெற்றுக்கொடுப்பார். ஆகவே எங்களது முதலாவது இனிங்ஸ் முடிந்து விட்டது. இனி இரண்டாவது இனிங்ஸ் ஆரம்பிக்கப்படவுள்ளது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தலவாக்கலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே மனோ கணேசன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இரண்டாவது இனிங்ஸில் சொந்த காணியில், சொந்த வீட்டில் தோட்டத்தொழிலாளர்கள் கௌரவத்துடன் வாழ வைப்பதற்கு சஜித் பிரேமதாச நடவடிக்கை எடுப்பார். அமைச்சர் திகாம்பரம் உங்களுக்கு கௌரவத்தினை ஏற்படுத்துவதற்காக பாடுபட்டு வருகிறார். அதனால் அவருடன் ஆயிரக்கணக்கான தம்பிகள் இருக்கிறார்கள். அவரை பாதுகாக்க ஒரு அண்ணனும் இருக்கிறார். அது வேறு யாருமல்ல மனோ கணேசன் என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்