இலங்கை

“தேர்தல் வாக்களிப்பு நிலையங்களுக்கு வருகை தரும் முஸ்லிம் பெண்கள் முகம் மூடும் வழமை உள்ளவர்களாக இருந்தால், முகத்தை மூடி வரலாம். ஆனால் வாக்களிப்பு நிலையத்தில் உள்ள அதிகாரிகளுக்கு முகத்தை திறந்து அடையாளப்படுத்தினால் போதுமானது.” என்று தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் தெரிவித்துள்ளார். 

காத்தான்குடி பள்ளிவாசல்கள், முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் மற்றும் சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகளை நேற்றுமுன்தினம் சனிக்கிழமை சந்தித்து தேர்தல் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியள்ளார்.

ரட்னஜீவன் ஹூல் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “வாக்களிக்கவுள்ள வாக்குச் சீட்டு வழமையை விட அளவில் பெரியதாக இருப்பதால் வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையத்தின் நுழைவாயிலில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் வேட்பாளர்கள் மற்றும் சின்னங்கள் அச்சிடப்பட்ட அறிவுறுத்தல்களை நன்றாக கவனித்து, வாக்களிக்க தீர்மானித்துள்ள வேட்பாளர் எந்த இடத்தில் உள்ளார் என்பதை தீர்மானம் எடுத்துக்கொண்டால், வாக்களிக்கும் போது நேர விரயம் மற்றும் வீண் சிரமங்களை தவிர்க்க முடியும்.

தேர்தல் காலத்தில் இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையில் பிரிவினைகள், முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் தேர்தல் பிரச்சாரங்கள் மேற்கொள்வதும், தேர்தல் முடிவுகள் உத்தியோகப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்னரே வேட்பாளர்கள் அல்லது அவர் சார்ந்தவர்கள் முடிவு என்ற பெயரில் அறிவிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.” என்றுள்ளார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் (வயது 56) சற்றுமுன்னர் (இன்று செவ்வாய்க்கிழமை) காலமானார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவை கைப்பற்றப்போவதாக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் உள்ள பள்ளிகள் காலதாமதமாக திறப்பதால் பாடங்களை குறைக்கத் திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 646 ஆகவும், பலியானவர்களின் எண்ணிக்கை 127 ஆகவும் உயர்ந்துள்ளது. அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது.

Worldometers இணையத் தளத்தின் அதிகாரப்பூர்வ சமீபத்திய தகவல் படி உலகம் முழுதும் 213 நாடுகளில் பரவியிருக்கும் கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முக்கிய புள்ளி விபரம் கீழே :

இந்திய சீன எல்லையான லடாக்கில் மேலும் ஆயிரக் கணக்கான வீரர்களைக் குவித்தும், போர் விமானங்களைத் தரித்தும் வருவதால் சீனா இந்தியா இடையே போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது.