இலங்கை

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகி வருவதாக அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் மௌனமே நிலவியதாகவும், எனினும் தமிழர் அரசியல் விவகாரம் குறித்து தாம் நேரடியாக ஜனாதிபதியுடன் பேச தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் இந்திய விஜயத்தில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கவனம் செலுத்தியிருந்த நிலையில் கடந்த சில தினங்களாக ஊடகங்களில் இந்த விடயங்கள் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவிடம் ஊடகமொன்று வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்திய விஜயத்தின் போது தமிழர் அரசியல் பிரச்சினை விவகாரத்தில் 13ஆம் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்து வரவேற்கத்தக்க ஒன்றாகும். எமது மக்களின் அபிலாசைகளை வெற்றிகொள்ள வேண்டிய நகர்வில், அரசியல் தீர்வு விடயத்தில் இந்தியாவின் முழுமையான ஆதரவும் ஒத்துழைப்பு இருக்க வேண்டும் என்ற எமது எதிர்பார்ப்பு இன்னும் சற்று பலமடைந்துள்ளது. ஆகவே பிரதமர் நரேந்திர மோடிக்கு எமது நன்றிகளை நாம் தெரிவிக்க விரும்புகின்றோம்.” என்றும் மாவை சேனாதிராஜா மேலும் தெரிவித்துள்ளார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவினராகிய நாங்கள் 130க்கும் அதிகமான ஆசனங்களை வெற்றிகொள்வோம்.” என்று பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

“நாட்டு மக்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுக்கும் அக்கறையுள்ள அரசாங்கத்தை நாம் உருவாக்குவோம்.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் சர்வதேச விமான சேவை ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆக. 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்திருப்பதாகவும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல் எனவும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தின், வாட், வலாய்ஸ் மற்றும் ஜெனீவா மாநிலங்களை கொரோனா வைரஸ் தொற்று சிவப்பட்டியலிட்டு, பயணத்தை தடை செய்ய பெல்ஜியம் முடிவு செய்துள்ளது.

9 வருட இடைவெளியின் பின் சொந்த அமெரிக்க மண்ணில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் தனியார் நிறுவனத்தின் க்ரூ டிராகன் விண்கலம் மூலம் இரு மாதங்களுக்கு முன்பு சர்வதேச விண்வெளி ஆய்வு மையமான ISS இற்குச் சென்றிருந்த அமெரிக்காவின் விண்வெளி வீரர்கள் இருவரும் தற்போது (ஞாயிறு இரவு இந்திய நேரப்படி) அந்த ஓடத்தின் மூலம் வெற்றிகரமாகப் பூமி திரும்பியுள்ளனர்.