இலங்கை

“தமிழ் மக்களுக்கு சமஸ்டி அடிப்படையிலான தீர்வு ஒன்றை வழங்க இந்தியா விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில், 13வது திருத்தச் சட்டம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாகாது” என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

13வது திருத்தச் சட்டம் தமிழர்களின் அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு ஒரு தீர்வாகுமா? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் சி.வி.விக்னேஸ்வரன், நேற்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “வடக்கு, கிழக்கு இணைப்பு உள்ளிட்ட காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்கினால் மாத்திரம் 13வது திருத்த சட்டம் எந்த அடிப்படையிலும் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வாகாது.

ஒற்றையாட்சிக்குள் தெற்கில் இருக்கும் பெரும்பான்மை மக்களின் கைப்பொம்மையாக 13வது திருத்தச் சட்டம் மாற்றப்பட்டிருப்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழர்களின் நிலங்கள், மொழி, கலாச்சாரம், வாழ்வு முறை, பாரம்பரியம், மதத் தலங்கள் யாவும் பெரும்பான்மை மக்கள் ஒற்றையாட்சியின் கீழ் பெற்றுக் கொண்டுள்ள அதிகாரங்களால் இன்று பாதிக்கப்பட்டு வருகின்றன.

தமிழ் மக்கள் முன்னரைவிட மிக மோசமான அடக்கு முறைக்குள் அகப்பட்டுள்ளனர். இதனை இந்தியா உணர வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு இந்தியாவே பாதுகாப்பு அரண். 13வது அரசியலமைப்பு திருத்தம் என்பது ஒரு கையினால் சிறிதளவு அதிகாரத்தைக் கொடுத்து மறு கையினால் அதனை எடுத்துக்கொள்ளும் ஒரு சட்டக் கையாளுகை என்பதை நான் முதலமைச்சராக இருந்த போது உணர்ந்துள்ளேன்.

ஆகவே, நீண்டகால அடிப்படையில் இலங்கையில் தமிழ் மக்களின் நிலையான பாதுகாப்பையும் நல்வாழ்வையும் உறுதிப்படுத்தும் வகையிலும் இணைந்த வடக்கு- கிழக்கில் சமஸ்டி அடிப்படையிலான ஒரு தீர்வினை ஏற்படுத்துவதற்கு இந்தியா முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.

முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வடக்கு- கிழக்கில் உள்ள ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களும் இனப்பிரச்சினைக்கான அதிகாரப் பகிர்வை கூட்டாக வலியுறுத்தியுள்ளமையை இலங்கை அதிகாரிகளும், இந்தியாவும் புரிந்துக்கொள்ள வேண்டும்.” என்றுள்ளது.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடந்த காலச் செயற்பாடுகள் தொடர்பில் தமிழ் மக்கள் மதிப்பீட்டைச் செய்ய வேண்டும். அதன் பின்னரே, இம்முறை வாக்களிக்க வேண்டும்.” என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். 

“எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவரும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக எனது படத்தினை பயன்படுத்தக் கூடாது.” என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். 

கோவிட்-19 வைரஸின் பெருந்தொற்று உலகப் பேரிடராக மாறி இந்தியாவில் 6 லட்சம் பேர் தொற்றுக்கு ஆளாகினர்.

அத்தியாவசிய நடவடிக்கைகளைத் தவிர்த்து கட்டுப்பாட்டு மண்டலங்களில் மக்கள் நடமாட்டத்திற்கு மும்பை காவல்துறை தடை விதித்துள்ளது.

சீன நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஹாங்கொங்கில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வருவதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. இதன் மூலம் ஹாங்கொங்கின் தன்னாட்சி அதிகாரம் முற்றிலும் ஒழிக்கப் பட்டு விட முடியும் என விமரிசகர்கள் எச்சரித்துள்ளனர்.

Worldometer இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளிவிபரம் :