இலங்கை

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு குற்றவியல் அமைப்பு இல்லை என்று சுவிட்சர்லாந்து நீதிமன்றம் ஒன் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

1999 முதல் 2009ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் விடுதலைப் புலிகளிற்கு நிதி சேகரித்ததாக சுவிசின் குற்றவியல் கோவையை மீறியதாக 12 பேரிற்கு எதிராக சுவிஸின் சட்டமா அதிபர் அலுவலகம் குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தது.

ஓன்பது வருட காலமாக மேற்கொண்ட விசாரணையின் பின்னர் உலக தமிழ் ஒருங்கிணைப்பு குழுவின் உறுப்பினர்களிற்கு எதிராகவே இந்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

எனினும், 2018 யூன் மாதம் சமஸ்டி நீதிமன்றம் விடுதலைப் புலிகளிற்கும் உலக தமிழர் ஒருங்கிணைப்பு குழுவிற்கும் இடையிலான தலைமைத்துவ தொடர்புகளிற்கான போதிய ஆதாரங்கள் இல்லை என சமஸ்டி குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

ஏப்பிரல் மாதம் சட்டமா அதிபர் திணைக்களம் இந்த தீர்ப்பிற்கு எதிராக முறையீடு செய்திருந்ததுடன் குற்றம்சாட்டப்பட்டவர்கள் குற்றவியல் அமைப்பிற்கு ஆதரவளித்துள்ளனர் என தெரிவித்திருந்தது.

இது குறித்து நேற்று செவ்வாய்க்கிழமை தனது தீர்ப்பை வெளியிட்டுள்ள சமஸ்டி நீதிமன்றம் தனது முன்னைய தீர்ப்பை மீண்டும் உறுதிசெய்துள்ளது.

சுவிசின் குற்றவியல் கோவையின் 260வது பிரிவு திட்டமிடப்பட்ட குற்றங்களை கட்டுப்படுத்துவதற்காகவே உருவாக்கப்பட்டது,அதன் பின்னர் அல்ஹைதா போன்ற அமைப்புகளிற்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

நிதி திரட்டப்படும் வேளை விடுதலைப்புலிகள் அமைப்பு குற்றவியல் அமைப்பாக கருதப்படவில்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அக்காலப்பகுதியில் சுவிட்சர்லாந்தில் விடுதலைப்புலிகளிற்காக நிதி திரட்டியவர்கள் தாங்கள் பின்னர் சட்டத்தை மீறுவார்கள் என கருதியிருக்க முடியாது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்பினர் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் அவர்களது பிரதான நோக்கம் இனசமூகத்திற்கு சுதந்திரத்தை பெற்றுக்கொள்வதே என்பது அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கான பிரதிநிதிகளின் சிபார்சுகளை வழங்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரியுள்ளார். 

பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் ஓகஸ்ட் மாதம் 02ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவு செய்யப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய மத்திய மந்திரிசபை நவம்பர் மாதம் வரை ஏழைமக்களுக்கு இலவச அரிசி மற்றும் பருப்பு வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சாத்தான்குளம் போலீசார் விசாரணையில் உயிரிழந்த தந்தை-மகன் சம்பவத்தையடுத்து தமிழ்நாட்டில் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பினருக்கு அரசு தடை விதித்துள்ளது.

சுவிற்சர்லாந்தின் மாநிலங்கள் சில இன்று வியாழக்கிழமை முதல் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மீண்டும் அறிமுகப்படுத்துகின்றன.

அமெரிக்க அரசின் புதிய விசா முடக்கம் தொடர்பான உத்தரவால் அங்கு கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் பெரும் பாதிப்படைந்துள்ளதுடன் இப்புதிய உத்தரவுக்கு எதிர்ப்புக்களும் எழுந்துள்ளன.