இலங்கை

கடந்த காலத்தில் கைவிடப்பட்ட சின்னங்களை விடுத்து, பொதுத் தேர்தலில் மொட்டுச் சின்னத்திலேயே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன போட்டியிட வேண்டும் என்று சுற்றாடல் மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார். 

சின்னத்திற்கு அன்றி நபர்களுக்கே மக்கள் வாக்களிப்பதாக கூறிய அவர், மொட்டு சின்னமே மக்கள் மத்தியில் பிரபலமானது என்றும் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த எஸ்.எம்.சந்திரசேன, “உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நாம் 50 இலட்சம் வாக்குகளை பெற்றுள்ளோம். கடந்த பொதுத் தேர்தலில் 69 இலட்சம் வாக்குகள் மொட்டுச் சின்னத்திற்கு கிடைத்தது.

மொட்டு சின்னம் தான் மக்கள் மத்தியில் பிரபலமான சின்னமாகும். எனவே கடந்த காலத்தில் கைவிடப்பட்ட சின்னங்களை ஒதுக்கி மொட்டுச் சின்னத்திலே போட்டியிட வேண்டும்.

ரணிலோ, சஜித்தோ யார் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு வந்தாலும் இரண்டு தடவைகள் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாவதை யாராலும் தடுக்க முடியாது. ஐ.தே.க.விற்குள் மோதல் அதிகரித்துள்ளது. ரஞ்சன் ராமநாயக்க, மங்கள சமரவீர ஆகியோருக்கு வேட்புமனு கொடுக்கக் கூடாது என கோரிக்கை வலுத்துள்ளது.” என்றுள்ளார்.

வடக்கு – கிழக்கு உள்ளிட்ட தமிழ் மக்கள் அதிகமுள்ள பகுதிகளில் தடைப்பட்டுப் போன அபிவிருத்தித் திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டு துரிதப்படுத்தப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

அமைச்சரவை அமைச்சர்கள் 28 பேரும், இராஜாங்க அமைச்சர்கள் 40 பேரும் நாளை புதன்கிழமை பதவியேற்கவுள்ளனர். 

டெல்லி உச்சநீதிமன்றத்தால் பூர்வீக சொத்து உரிமையில் சம பங்கு பெண் பிள்ளைகளும் பெறலாம் எனும் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

இந்தியாவில் பருவமழை காலம் என்பதால் பவானிசாகர் மற்றும் மேட்டூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வடைந்து வருகிறது.

பசுபிக் பெருங்கடலில் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்த இந்தோனேசியா உலகில் நிலநடுக்கங்கள், சுனாமி மற்றும் எரிமலை போன்ற அனர்த்தங்கள் ஒரு வருடத்தில் அதிகளவில் ஏற்படும் நாடுகளில் ஒன்றாகும்.

அண்மையில் பெய்ரூட்டில் நடந்த வெடி விபத்தை அடுத்து லெபனானில் வெடித்த மக்கள் புரட்சியின் விளைவாக லெபனான் அரசின் பிரதமரான தானும், அமைச்சரவையும் பதவி விலகுவதாக அந்நாட்டு பிரதமர் ஹசன் தியாப் தொலைக் காட்சியில் அறிவித்துள்ளார்.