இலங்கை
Typography

“முன்னேற்றமானதொரு நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாட்டின் அரச துறையில் உள்ள அனைத்துப் பலவீனங்களையும் உடனடியாக சரிசெய்ய வேண்டும்.” என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இராஜாங்க அமைச்சுக்களுக்காக தெரிவுசெய்யப்பட்ட புதிய செயலாளர்கள் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் தமது நியமனக் கடிதங்களை பெற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “அரச சேவையை முறையாகவும் வினைத்திறனாகவும் முன்னெடுப்பதில் நவீன தொழிநுட்பத்தை கூடியளவு பயன்படுத்த வேண்டும். அரச கட்டமைப்பை ஊழல் மோசடிகளற்ற சரியான பொறிமுறையாக நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

அரச ஊழியர்களுக்கு பயிற்சி சந்தர்ப்பங்களை விரிவுபடுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அண்மையில் நான் இந்தியாவுக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது இது தொடர்பில் கவனம் செலுத்தினேன்.

எனது கொள்கை பிரகடனத்தின் மூலம் நாட்டின் அனைத்து துறைகள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அந்த பொறுப்பை நிறைவேற்றுவதில் அனைத்து அமைச்சுக்களுக்கும் வழங்கப்பட்டுள்ள பொறுப்பு பாரியதாகும். அமைச்சு மட்டங்களில் உரிய முறையில் பொறுப்புக்களை நிறைவேற்றி தற்போதைய அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்துள்ள எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கு அனைவரும் பொறுப்புடன் செயற்படுவார்கள் என எதிர்பார்க்கிறேன்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்