இலங்கை
Typography

அடுத்த பொதுத் தேர்தலில் 113 ஆசனங்களை வெற்றிகொள்வதே இலக்காக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

“நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி உண்மையிலேயே பின்னடைவு கண்டிருக்கின்றது. தேர்தலின்போது பெளத்த, இளைஞர்கள் மற்றும் நடுத்தர வகுப்பினரின் வாக்குகள் ஐக்கிய தேசிய முன்னணிக்கு கிடைக்கவில்லை என்பது ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டிருக்கின்றது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர் மன்றத்தினரை சிறிகொத்தவில் நேற்று திங்கட்கிழமை சந்தித்து உரையாடியபோதே ரணில் விக்ரமசிங்க இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் 113 ஆசனங்களை இலக்கு வைத்து போட்டியிட வேண்டும். இதற்கு ஏற்றாற்போல இளைஞர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள வேண்டும். பெளத்த மதகுருமாரை சந்தித்து ஐ.தே.கவின் எதிர்கால வேலைத்திட்டம் தொடர்பில் நாம் விரைவில் கலந்துரையாடவுள்ளோம்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்