இலங்கை
Typography

இறக்குமதி செய்யப்படும் பால்மா விலைகள் நேற்று திங்கட்கிழமை முதல் குறைக்கப்பட்டுள்ளன. 

இதற்கமைய ஒரு கிலோகிராம் பால்மா 40 ரூபாவாலும், 400 கிராம் பால்மா 15 ரூபாவாலும் விலை குறைக்கப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.

அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள வரிச் சலுகைகளுக்கு அமைய இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

வரிச்சலுகைக்கான பலனை பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் தினங்களில் சீமெந்து விலைகளும் குறைக்கப்படும் எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

அரசாங்கம் அண்மையில் வற் வரி அடங்கலான வரிவகைகளை 15 வீதத்தில் இருந்து 8 வீதமாக குறைத்தது தெரிந்ததே. இதனுடன் மேலும் பொருட்கள் சேவைகளின் விலைகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்