இலங்கை
Typography

இலங்கை இராணுவம் பொதுமக்களின் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்கின்றது என சர்வதேச புலம்பெயர் அமைப்புகளும், இலங்கையில் சிலரும் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானவை என்று பாதுகாப்புச் செயலாளரான கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். 

இஸ்லாமிய மதத்தின் பெயரில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் போன்றதொரு சம்பவம் இனியும் இடம்பெற இராணுவம் இடமளிக்கக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள இராணுவ தலைமையத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கமால் குணரத்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இராணுவ சேவையானது தாய் நாட்டிற்கு சேவையாற்றும் பாரிய கடமையாகும். உலகில் உன்னதமான தொழிலாக இராணுவ சேவையுள்ளமையால், எப்போதும் அதை பெருமையுடனும், மரியாதையுடனும் பார்க்கவேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது, அதை எந்த சந்தர்ப்பத்திலும் வீழ்ச்சியடைய விடக்கூடாது.

இலங்கை இராணுவமானது கடந்த காலங்களில் நாட்டிற்கு பாரியசேவையை ஆற்றியுள்ளது. இதற்காக முழு நாடும் இராணுவத்திற்கு கடன்பட்டிருக்கிறது, இந்த பெருமைமிக்க அமைப்பில் நீங்களும் அங்கத்தவர்களாய் இருப்பதை முன்னிட்டு நீங்கள் பெருமையடையுங்கள்.

அத்துடன் உங்களை சரியான தலைமைத்துவ படுத்தி முன்னோக்கி செல்வதற்கான இராணுவ தளபதி தற்போது உங்களுடன் உள்ளார். இராணுவ மனிதர்களாகிய எமது தரத்திற்கு ஏற்ப நாம் வாழ வேண்டும். விடுதலைப்புலிகள் பயங்கரவாத்தை தோற்கடித்து எமது நாட்டில் சமாதான சூழ்நிலையை நிலை நாட்டிய இராணுவத்தை கௌரவமாக எமது நாட்டில் மதிக்கின்றார்கள்.

அதன் பிரகாரம் வெளிநாடுகளில் உள்ள இராணுவ தலைமையகத்தை போன்று இன்று எமது இராணுவ தலைமையகமானது ஶ்ரீ ஜயவர்தனபுர பூமியில் ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டுள்ளன. இருந்த போது எமது இராணுவ வீரர்கள் கடந்த காலங்களில் சிறைகளுக்குள் அடைக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டனர். இப்படியான சம்பவங்கள் வேதனைக்குரிய விடயமாக அமைகின்றது.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்