இலங்கை

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கைகள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், எதிர்வரும் வியாழக்கிழமை தீர்க்கமான முடிவொன்று கிடைக்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். 

ரணில் விக்ரமசிங்க கட்சித் தலைமைப் பதவியிலிருந்து விலகி, சஜித் பிரேமதாசவிடம் தலைமைப் பதவியைக் கையளிக்க வேண்டும் என்பது, தொடர்ச்சியான கோரிக்கையாகும். சஜித் ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்களும் அதற்காக தொடர்ச்சியாக போராடி வருகின்றனர்.

எனினும், பௌத்த பீடங்கள் கரு ஜயசூரியவை தலைவராக்குமாறு கோரி வருகின்றன. இந்த நிலையில், தலைமைத்துவ சபை ஒன்றை அமைத்து பிரச்சினைக்கு தீர்வு காண்பதோடு, தலைமைப் பதவியில் தொடர்ந்தும் இருக்க ரணில் விக்ரமசிங்க முயற்சித்து வருகிறார்.

ஆனால், எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில், தலைமைத்துவ சபையை நிராகரித்து, சஜித்தை தலைவராக்கும் முயற்சிகளை முன்னெடுக்க அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர். அதற்கு, சாதகமான பதில்கள் கிடைக்காத பட்சத்தில், இரகசிய வாக்கெடுப்பை நடத்தி, தீர்வைக் காணும் முயற்சிகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தியாகி திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு சாவகச்சேரி சிவன் ஆலய முன்றலில் தற்போது (இன்று சனிக்கிழமை) உண்ணாவிரதப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றது. 

தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில், செல்வச் சந்நிதி முருகன் ஆலய முன்றலில் நாளை சனிக்கிழமை முன்னெடுக்கப்படவிருந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

அரசியல் மற்றும் பொதுவாழ்க்கையில் புகழ்பெற்ற பிரபலங்கள் மறையும்போதும் ராணுவம் அல்லது காவல்துறை அணிவகுத்து நின்று 72 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்படுவது வழக்கம்.

இந்தியாவில் வேளாண் மசோதாக்களுக்கு எதிரான போராட்டம் வலுப்பெற்று வருகிறது.

சீனாவில் உள்ள கேன்சினோ பயாலஜிக்ஸ் என்ற மருந்து நிறுவனம் அந்நாட்டு இராணுவ அறிவியல் குழுவுடன் சேர்ந்து தயாரித்து வரும் Ad5-nCoV என்ற பெயருடைய கொரோனா தடுப்பு மருந்தின் 3 ஆவது கட்ட மருத்துவப் பரிசோதனையை ரஷ்யாவில் உள்ள பெட்ரோவேக்ஸ் என்ற மருந்து நிறுவனத்தின் மூலம் அங்கிருக்கும் தன்னார்வலர்களிடம் மேற்கொண்டு வருகின்றது.

சுவிற்சர்லாந்து தலைநகர் பேர்ன் நாடாளுமன்றித்தின் முன்னதாக அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தில் வாரத் தொடக்கத்தில் "மாற்றத்திற்கான எழுச்சி" இன் ஆர்வலர்கள் உருவாக்கிய "காலநிலை முகாம்" வெளியேற்றப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு, நேற்று வெள்ளி மாலை ஹெல்வெட்டியா பிளாட்ஸில் கூடினர்.