இலங்கை
Typography

நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான உறுதிப்படுத்தலை பிரித்தானியா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் வெளிப்படுத்தியுள்ளது. 

பிரித்தானியாவின் சிறப்பு பிரதிநிதி கரேத் பேய்லி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேற்று திங்கட்கிழமை சந்தித்து பேசினார்.

குறித்த சந்திப்பின்போது, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான பிரித்தானியாவில் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் முகமாக அவரது கலந்துரையாடல் இடம்பெற்றதாக பிரித்தானிய தூதுவராலயம் அறிவித்துள்ளது.

இந்த சந்திப்பின்போது இலங்கைக்கான பிரித்தானியத் தூதுவர் சாரா ஹல்டன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்