இலங்கை

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலக வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

ரணில் விக்ரமசிங்க கடந்த 25 வருடங்களாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பதவியை வகிப்பதாக தெரிவித்த அவர், தற்போதைய நிலையில் கட்சியின் பாராளுமன்ற குழுவில் உள்ள சிலர் மாத்திரமே அவர் தலைவராக தொடர்ந்தும் செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

எனவே மாற்றிடாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக்கு சஜித் பிரேமதாச தெரிவாக வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் குறித்து ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரெஸ் கவலை வெளியிட்டுள்ளார். 

இந்து சமுத்திரம் அனைத்து நாடுகளுக்கும் திறந்த மற்றும் சுதந்திர வலயமாக அமைய வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

கொரோனா ஊரடங்கில் 5-வது கட்ட தளர்வுகளை அறிவித்தது இந்திய அரசு. அதில் திரையரங்குகளை அக்டோபர் 15-ஆம் திகதி முதல் 50 % இருக்கைகளை பார்வையாளர்களைக் கொண்டு நிரப்பி மீண்டும் நடத்தத் தொடங்கலாம், காட்சிகளைத் திரையிடலாம் என்று அறிவித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், ஹத்ரஸ் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த 19 வயது இளம்பெண், தனது தாயுடன் வயலுக்கு கடந்த 14ம் திகதி  சென்றபின்திடீரென காணாமல் போனார்.

உலகளாவிய கோவிட்-19 தொற்று இறப்புக்கள் சமீபத்தில் 10 இலட்சத்தைத் தாண்டியுள்ள நிலையில் இந்தப் புள்ளிவிபரம் மிகவும் எதிர்பாராததும், வேதனை மிக்க மைல்கல் என்றும் ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியோ கட்டரஸ் கவலை தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்து மக்கள் தங்கள் ஜனநாயக உரிமையினை மீண்டும் ஒருமுறை நாட்டு நலனை முன்னிறுத்திச் சரியாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.