இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க 15,000 குரல் பதிவுகள் அடங்கிய 5 இறுவட்டுக்களை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்தமை உண்மையெனவும் அதனை தாம் நேரில் கண்டதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுகையில், “ரஞ்சன் ராமநாயக்க இறுவட்டுக்களை கையளித்தமையும் அதற்கான பற்றுச்சீட்டை அவர் செயலாளர் நாயகத்திடமிருந்து பெற்றுக்கொண்டதையும் நான் நேரில் கண்டேன். அது தொடர்பில் வெளிவரும் தகவல்கள் உண்மையானவை.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க 15,000 குரல் பதிவுகள் உள்ளடங்கிய 5 இறுவட்டுக்களை சபையில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு சமர்ப்பித்ததாக நான் கூறியிருந்தேன். என்றாலும் பிரதி சபாநாயகர் அவ்வாறு இறுவட்டுக்கள் எதுவும் கிடைக்கவில்லையென கூறியுள்ளார்.

நான் சபையில் இருக்கும்போதுதான் ரஞ்சன் ராமநாயக்க இந்த 5 இறுவட்டுகயையும் சபையில் சமர்ப்பித்திருந்தார். பாராளுமன்ற பொதுச் செயலாளரின் கைகளில்தான் இவர் இறுவட்டுக்களை கையளித்தார். இந்த இறுவட்டுக்களை பெற்றுக்கொண்டு பதிவொன்றை மேற்கொண்ட பாராளுமன்ற செயலாளர் நாயகம் ரஞ்சன் ராமநாயக்கவை ஹன்சார்ட் பிரிவில் கையளிக்குமாறு அனுப்பினார்.

அவர் இறுவட்டுக்களை கையளிக்க செல்லும் தருணத்தில்தான் அவருக்கு தொலைபேசி அழைப்பொன்று வந்தது. இறுவட்டுக்களை சமர்ப்பிப்பதில் உள்ள சட்ட சிக்கல்கள் குறித்தும், அந்த இறுவட்டுக்கள் செயற்படவில்லையென இன்று (நேற்று) ரஞ்சன் என்னிடம் கூறினார். நான் எனது பெயருக்கு பங்கம் ஏற்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. இதுதான் நடந்த சம்பவம்.

ஊடகங்கள் எனக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு கேள்வியெழுப்புகின்றன. அவர் உண்மையாகவே இறுவட்டுகக்ளை செயலாளர் நாயகத்திடம் ஒப்படைத்துள்ளதுடன், அதற்கான பற்றுச்சீட்டையும் பெற்றுக்கொண்டுள்ளார்.” என்றுள்ளார்.

அரச கணக்குகள் பற்றிய குழுவின் (CoPA) தலைவராக ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண நியமிக்கப்பட்டுள்ளார். 

‘20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக தற்போது கருத்து வெளியிடும் ஆளுங்கட்சியினர் இன்னும் சில வருடங்களில் இதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிவரும்.’ என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் 10 நாட்கள் நடைபெற்ற மாநிலங்களவையின் மழைக்கால கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவு செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தின் பிவண்டி பகுதியில் அமைந்துள்ள 3மாடி கட்டிடம் ஒன்று திடிரென இடிந்து விழுந்தது.

கடந்த வியாழக்கிழமை ஐரோப்பிய யூனியன் தலைவர்களை புருஸ்ஸெல்ஸில் சந்தித்த நிலையில், தொடர்ந்து இழுபறியில் இருந்து வரும் பிரெக்ஸிட் விடயத்தில் தொடர்ந்து விளையாட வேண்டாம் என இலண்டனில் இருக்கும் பிரிட்டன் அதிகாரிகளிடம் ஜேர்மனியின் ஐரோப்பா விவகாரங்களுக்கான அமைச்சர் மைக்கேல் றொத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகின் வடதுருவத்துக்கு அருகே உள்ள கிறீன்லாந்து மற்றும் தென் துருவத்தின் அத்திலாந்திக் கடல் ஆகிய இடங்களில் இருக்கும் பனிப்பாறைகள் நிகழ்காலத்தில் அதிகரித்து வரும் உலக வெப்பமயமாக்கலினால் வேகமாக உருகி வருகின்றன.