இலங்கை

கைது செய்யப்படும் அனைவரையும் சமமாக நடாத்துமாறும், எந்தவித அழுத்தங்களுக்கும் கீழ்ப்படியாது செயற்படுமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதில் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். 

எந்தவொரு காரணத்திற்காகவும் அல்லது வெளி நோக்கங்களுக்காகவும் எவரும் கைது செய்யப்படக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எவரேனும் ஒரு நபரை கைது செய்யும் நடவடிக்கை இடம்பெற வேண்டியது குறித்த பொறுப்பை நிறைவேற்றும் அதிகாரியின் தொழில்சார் தீர்ப்பின் அடிப்படையிலாகும். அக்கடமை சுயாதீனமாகவும் எவ்வித பயமுறுத்தல் அல்லது அனுசரணைகளுமின்றி இடம்பெறுவதை உறுதிசெய்து கொள்ளுமாறும் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்துமாறு ஜனாதிபதி, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி. ஜயசுந்தரவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

“கைது நடவடிக்கைகள் தண்டனையின் ஒரு பகுதியல்ல என்பதுடன், அது கைது செய்யப்படும் நபரின் நற்பெயருக்கும் சமூக அந்தஸ்திற்கும் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடாகும். இதனால் பொலிஸார் மிகுந்த கவனத்தோடும் சட்டதிட்டங்களை முழுமையாக பேணியும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் வைத்தியர்கள் போன்ற தொழில்வல்லுனர்களை கைது செய்யும் போது பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்படும் நபருக்கு உரிய மரியாதையினை வழங்குதல் வேண்டும். தூரநோக்குடன் உரிய முறையில் கடமையை நிறைவேற்றுமாறும் தேவையான போது சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் செயற்படுமாறும் ஜனாதிபதியின் செயலாளரினால் பதில் பொலிஸ்மா அதிபர் சீ.டீ.விக்ரமரத்னவுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் ஆகியோருக்கு எதிராக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் இன்று திங்கட்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டமூலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இரட்டைக் குடியுரிமை குறித்த பிரிவு, 20வது திருத்தச் சட்டமூலத்திலும் தக்கவைக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். 

இன்று அதிகாலை மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தின் பிவண்டி பகுதியில் அமைந்துள்ள 3மாடி கட்டிடம் ஒன்று திடிரென இடிந்து விழுந்தது.

இதற்கான விடையை Virologist திரு ஷாஹித் ஜமீல் அவர்களை திரு கரண் தபார் எடுத்த பேட்டியில் இருந்து அறிய முடியும் ICMR தலைவர் திரு பல்ராம் பார்கவா கொரோனாவை நாம் கட்டுக்குள் வைத்துள்ளோம் என கூறியுள்ளார்

பெண் சிறுமிகளின் கல்வி உரிமை தொடர்பான புரட்சியாளரும், மிக இளவயதில் சமாதானத்துக்கான நோபல் பரிசை வென்றவருமான பாகிஸ்தானைச் சேர்ந்த தன்னார்வலரான மலாலா யூசுஃப்சாய் அதிர்ச்சி தரும் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

ஈரான் அமெரிக்கா இடையே வர்த்தகப் போர் முற்றி வரும் நிலையில், ஈரான் மீது மீண்டும் பாரிய பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்காவுக்கு உரித்தில்லை என ஐ.நா பாதுகாப்புச் சபையின் ஏனைய முக்கிய உறுப்பு நாடுகளான பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகள் தெரிவித்துள்ளன.