இலங்கை

முல்லைத்தீவு, மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் இருந்து, இன்று புதன்கிழமை மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில், புனர்வாழ்வு வைத்தியசாலை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்ட நிலையில், குறித்த வைத்தியசாலையை நிர்மாணிபதற்காக, வைத்தியசாலை நிர்மாணிக்கப்படும் காணியில், துப்புரவுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது அங்கு கண்ணிவெடிகள் இருப்பதாக திடீரென அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பகுதி மனித நேயக் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களால், கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.

இந்நிலையில், இன்று குறித்த காணியின் ஒரு பகுதியில் மனித எச்சங்கள் காணப்பட்டன.

இதன்போது, குறித்த பகுதியில் புகைப்படம், வீடியோ எடுப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு, பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டதுடன், குறித்த வளாக வாயில் கதவும் கண்ணிவெடியகற்றும் பணியாளர்களால் மூடப்பட்டது.  

பின்னர், குறித்த இடத்தை பார்வையிட்ட நீதிபதி, குறித்த இடத்தின் ஆரம்பகால வரலாறுகளையும் இந்த விடயம் தொடர்பான வரலாறுகளையும், ஆராயுமாறு, மாங்குளம் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்ததுடன், இன்று குறித்த பகுதியில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டார்.

அரச கணக்குகள் பற்றிய குழுவின் (CoPA) தலைவராக ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண நியமிக்கப்பட்டுள்ளார். 

‘20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக தற்போது கருத்து வெளியிடும் ஆளுங்கட்சியினர் இன்னும் சில வருடங்களில் இதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிவரும்.’ என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் 10 நாட்கள் நடைபெற்ற மாநிலங்களவையின் மழைக்கால கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவு செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தின் பிவண்டி பகுதியில் அமைந்துள்ள 3மாடி கட்டிடம் ஒன்று திடிரென இடிந்து விழுந்தது.

கடந்த வியாழக்கிழமை ஐரோப்பிய யூனியன் தலைவர்களை புருஸ்ஸெல்ஸில் சந்தித்த நிலையில், தொடர்ந்து இழுபறியில் இருந்து வரும் பிரெக்ஸிட் விடயத்தில் தொடர்ந்து விளையாட வேண்டாம் என இலண்டனில் இருக்கும் பிரிட்டன் அதிகாரிகளிடம் ஜேர்மனியின் ஐரோப்பா விவகாரங்களுக்கான அமைச்சர் மைக்கேல் றொத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகின் வடதுருவத்துக்கு அருகே உள்ள கிறீன்லாந்து மற்றும் தென் துருவத்தின் அத்திலாந்திக் கடல் ஆகிய இடங்களில் இருக்கும் பனிப்பாறைகள் நிகழ்காலத்தில் அதிகரித்து வரும் உலக வெப்பமயமாக்கலினால் வேகமாக உருகி வருகின்றன.