இலங்கை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் வடக்கில் அதிகளவான இராணுவச் சோதனைச் சாவடிகளை அமைத்து தமிழ் மக்களை இம்சிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். 

“தற்போதைய அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதனூடாக, தமிழர் பகுதிகளில் இராணுவ காவலரண்களும் சோதனைச்சாவடிகளுமே அதிகரிக்கும். தமிழ் மக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே துணை

இராணுவ பிரசன்னம் அதிகரித்த மாகாணமாக, வடக்கு மாகாணம் இன்று காட்சியளிக்கின்றது. இந்த அரசாங்கம் ஆட்சிப்பீடமேறிய கையோடு அதிகளவான இராணுவ சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு தமிழ் மக்கள் நாள்தோறும் இம்சிக்கிறது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கான பிரதிநிதிகளின் சிபார்சுகளை வழங்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரியுள்ளார். 

பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் ஓகஸ்ட் மாதம் 02ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவு செய்யப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய மத்திய மந்திரிசபை நவம்பர் மாதம் வரை ஏழைமக்களுக்கு இலவச அரிசி மற்றும் பருப்பு வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சாத்தான்குளம் போலீசார் விசாரணையில் உயிரிழந்த தந்தை-மகன் சம்பவத்தையடுத்து தமிழ்நாட்டில் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பினருக்கு அரசு தடை விதித்துள்ளது.

சுவிற்சர்லாந்தின் மாநிலங்கள் சில இன்று வியாழக்கிழமை முதல் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மீண்டும் அறிமுகப்படுத்துகின்றன.

அமெரிக்க அரசின் புதிய விசா முடக்கம் தொடர்பான உத்தரவால் அங்கு கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் பெரும் பாதிப்படைந்துள்ளதுடன் இப்புதிய உத்தரவுக்கு எதிர்ப்புக்களும் எழுந்துள்ளன.