இலங்கை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் இடங்கள் மற்றும் பௌத்த வழிபாட்டுத் தலங்களின் எல்லைகளை அடையாளமிட்டு அவற்றை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

பௌத்த பிக்குகள் சிலருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனை கூறினார். புத்த சாசனம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட அகில இலங்கை பிக்குகள் அமைப்பு நேற்று வியாழக்கிழமை அலரி மாளிகையில் பிரதமரை சந்தித்தனர்.

கடலை அண்டிய விகாரைகள், யாழ்ப்பாணத்தின் வரலாற்று இடங்கள், நெடுந்தீவில் உள்ள பண்டைய விகாரை, முல்லைதீவில் உள்ள கருகந்த விகாரை மற்றும் பிற தொல்பொருள் இடங்கள் குறித்து தொல்பொருள் அதிகாரிகளுடன் கலந்துரையாடி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கலாச்சார அமைச்சின் செயலாளருக்கு பிரதமர் அறிவுறுத்தியதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு மிக வேகமாக இராணுவ ஆட்சியை நோக்கி செல்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார். 

‘வெறுமனே சத்தமிட்டுக் கொண்டிருப்பதல்ல, செயலில் செய்து காட்டுவதே எனது வழி’ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் 72வது குடியரசு தின விழா, தலைநகர் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவில் முப்படைகளின் அணிவகுப்பு இடம்பெற்றது. முப்படைகளின் அணிவகுப்பு நிறைவுற்றதும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக முன்னேடுக்கப்பட்டு வரும் விவசாயிகளின் டெல்லி போராட்டம் இன்று பிரமாண்ட அளவில் நடத்தப்படுகிறது.

ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுக் கொள்ளும் விழாவில் கலந்து கொண்டிருந்த போது அதிபர் ஜோ பைடென் சுவிட்சர்லாந்து தயாரிப்பான சுமார் $7000 டாலர் பெறுமதியான றோலெக்ஸ் கடிகாரத்தை அணிந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சமீபத்தில் தென் சீனக் கடற்பரப்பில் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல் ரோந்து நடவடிக்கைக்காக நுழைந்ததால் பதற்றம் அதிகரித்தது.