இலங்கை
Typography

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். 

இன்று வெள்ளிக்கிழமை காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக நாட்டை வந்தடைந்த அவர் குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

அவரிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டதையடுத்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கடந்த ஐந்து ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த நிலையிலேயே, உதயங்க வீரதுங்க இன்று இலங்கை வந்தார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்