இலங்கை

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா மார்ச் மாதம் 07ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளன. 

அத்துடன் இம்முறை பத்தாயிரத்துக்கும் அதிகமான பக்கதர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார்.

மார்ச் மாதம் 06ஆம் திகதி கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன், ஆரம்பமாகி, 07 ஆம் திகதி திருவிழா நடைபெறவுள்ளது.

இந்நிலையில் கச்சதீவுக்கு யாத்திரிகர்கள் செல்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல், யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில், பொலிஸ் அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள், இராணுவத்தினர், அரச மற்றும் தனியார், போக்குவரத்து துறைசார்ந்த அதிகாரிகள், சிறைச்சாலை அதிகாரிகள், நீதிமன்ற அதிகாரிகள், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

இக்கலந்துரையாடல் தொடர்பாக மேலதிக அரச அதிபர் தெரிவிக்கையில், “மார்ச் மாதம் 06ஆம் திகதி அதிகாலை 06.00 மணி முதல், இரவு 10.00 மணிவரை கச்சதீவுக்கு செல்வதற்கான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து தரிப்பிடத்திலிருந்தும், தனியார் பேருந்து தரிப்பிடத்திலிருந்தும், குறிகட்டுவானுக்கான போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.குறிகட்டுவானில் இருந்து, கச்சதீவுக்கான படகுச் சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

குறிகட்டுவானிலிருந்து, கச்சதீவுக்கான படகுச் சேவைக் கட்டணம், ஒரு வழிக் கட்டணமாக 325 ரூபாவும், நெடுந்தீவிலிருந்து, கச்சதீவுக்கான கட்டணமாக 250 ரூபாவும், நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், கச்சதீவில், உணவு மற்றும், சுகாதாரம், உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்வதற்கான தீர்மானங்களும் எடுக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து மற்றும் யாத்திரிகர்கள் தங்குமிட வசதிகள், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும், கடற்படை,பொலிஸார் மற்றும் இராணுவம் இணைந்து மேற்கொண்டுள்ளனர். இம்முறை நடைபெறவுள்ள பெருவிழாவில், இந்தியாவிலிருந்து, சமார் 3,000க்கும் அதிகமாக யாத்திரிகர்களும், இலங்கையிலிருந்து 7,000க்கும் அதிகமான யாத்திரிகர்களும் வருகை தருவார்களென எதிர்பார்க்கப்பட்டுள்ளது. யாத்திரிகர்கள் எந்தவித அச்சமுமின்றி, பாதுகாப்பான முறையில் தமது வழிபாட்டில் ஈடுபட முடியும்.” என்றுள்ளார்.

அரச கணக்குகள் பற்றிய குழுவின் (CoPA) தலைவராக ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண நியமிக்கப்பட்டுள்ளார். 

‘20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக தற்போது கருத்து வெளியிடும் ஆளுங்கட்சியினர் இன்னும் சில வருடங்களில் இதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிவரும்.’ என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் 10 நாட்கள் நடைபெற்ற மாநிலங்களவையின் மழைக்கால கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவு செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தின் பிவண்டி பகுதியில் அமைந்துள்ள 3மாடி கட்டிடம் ஒன்று திடிரென இடிந்து விழுந்தது.

கடந்த வியாழக்கிழமை ஐரோப்பிய யூனியன் தலைவர்களை புருஸ்ஸெல்ஸில் சந்தித்த நிலையில், தொடர்ந்து இழுபறியில் இருந்து வரும் பிரெக்ஸிட் விடயத்தில் தொடர்ந்து விளையாட வேண்டாம் என இலண்டனில் இருக்கும் பிரிட்டன் அதிகாரிகளிடம் ஜேர்மனியின் ஐரோப்பா விவகாரங்களுக்கான அமைச்சர் மைக்கேல் றொத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகின் வடதுருவத்துக்கு அருகே உள்ள கிறீன்லாந்து மற்றும் தென் துருவத்தின் அத்திலாந்திக் கடல் ஆகிய இடங்களில் இருக்கும் பனிப்பாறைகள் நிகழ்காலத்தில் அதிகரித்து வரும் உலக வெப்பமயமாக்கலினால் வேகமாக உருகி வருகின்றன.