இலங்கை

“எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் பதிவு செய்யப்பட்ட கூட்டணியிலேயே பொதுத் தேர்தலில் களமிறங்குவோம்.“ என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

“புதிய கூட்டணியின் தேர்தல் சின்னல், இதயம், யானை என்ற இரண்டும் இல்லை என்றால், அன்னப்பறவையை ஏற்றுக்கொள்வோம்“ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“கூட்டணி தலைவராக சஜித் பிரேமதாசவும், கூட்டணி தலைமைக்குழுவில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளுடன் கூட்டணி பங்காளி கட்சி தலைவர்களும் இடம்பெறுவோம். கூட்டணியின் பொதுசெயலாளர் ரஞ்சித் மத்தும்பண்டாரவும், வேட்பாளர் தெரிவுக்குழுவின் தலைவராக சஜித் பிரேமதாசவும் செயற்படுவார்கள். இவை எங்கள் இந்த குறைந்தபட்ச நிலைப்பாடுகள். இவற்றை ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு ஏற்கும் என்று நம்புகிறேன்.“ என்றும் மனோ கணேசன் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஐக்கிய தேசியக் கட்சியே கூட்டணியின் பிரதான கட்சி. அந்த கட்சி பிளவுபடக்கூடாது. இதில் நாம் மிகவும் அக்கறை கொண்டு இருக்கிறோம். உண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்கள், பெரும்பான்மை முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், இன்றைய உள்ளூராட்சி மன்ற பெரும்பான்மை உறுப்பினர்கள், பெரும்பான்மை கடைநிலை உறுப்பினர்கள் சஜித் அணியுடன்தான் இருக்கின்றார்கள். நாங்களும் அவர்களுடன் இருக்கின்றோம்.

ஐக்கிய தேசியக் கட்சி பிளவுபடக்கூடாது என்ற சஜித் தலைமையிலான எமது ஒட்டுமொத்த நல்லெண்ணத்தை எவரும் எமது பலவீனமாக கருதி எம்முடன் விளையாட முயலக்கூடாது. அப்படியான விளையாட்டு முயற்சியில் எவரும் ஈடுபட்டால், சஜித் பிரேமதாச தலைமையிலான எமது கூட்டணியின் இதயம் சின்னத்தில் நாம் நிச்சயம் களமிறங்குவோம். அதற்கான எல்லா ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்து விட்டன.

பதிவு செய்யப்பட்ட கூட்டணி, கூட்டணி தலைவர் சஜித் பிரேமதாச, பொதுசெயலாளர் ரஞ்சித் மத்தும்பண்டார, வேட்பாளர் தெரிவுக்குழு தலைவர் சஜித் பிரேமதாச, என்பவை ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு எடுத்த தீர்மானங்கள்தான்.

இன்று இவற்றில் இருந்து பின்வாங்குவது யார் என மக்களுக்கு தெரியும். எங்களுடன் முரண்படுகின்றவர்கள் யார் என மக்களுக்கு தெரியும். ஐதேக பிளவுப்படுமானால், அதற்கான முழு பொறுப்பை எம்முடன் முரண்படுகின்றவர்கள்தான் ஏற்க வேண்டும். இப்படி செய்து ஆளும் அரசாங்கத்தை மகிழ்ச்சியடைய செய்து, அரசாங்கத்துக்கு தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொடுத்து விட வேண்டாம் என சம்பந்தப்பட்டோரை கேட்டுக்கொள்கிறேன்.” என்றுள்ளார்.

அரச கணக்குகள் பற்றிய குழுவின் (CoPA) தலைவராக ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண நியமிக்கப்பட்டுள்ளார். 

‘20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக தற்போது கருத்து வெளியிடும் ஆளுங்கட்சியினர் இன்னும் சில வருடங்களில் இதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிவரும்.’ என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் 10 நாட்கள் நடைபெற்ற மாநிலங்களவையின் மழைக்கால கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவு செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தின் பிவண்டி பகுதியில் அமைந்துள்ள 3மாடி கட்டிடம் ஒன்று திடிரென இடிந்து விழுந்தது.

கடந்த வியாழக்கிழமை ஐரோப்பிய யூனியன் தலைவர்களை புருஸ்ஸெல்ஸில் சந்தித்த நிலையில், தொடர்ந்து இழுபறியில் இருந்து வரும் பிரெக்ஸிட் விடயத்தில் தொடர்ந்து விளையாட வேண்டாம் என இலண்டனில் இருக்கும் பிரிட்டன் அதிகாரிகளிடம் ஜேர்மனியின் ஐரோப்பா விவகாரங்களுக்கான அமைச்சர் மைக்கேல் றொத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகின் வடதுருவத்துக்கு அருகே உள்ள கிறீன்லாந்து மற்றும் தென் துருவத்தின் அத்திலாந்திக் கடல் ஆகிய இடங்களில் இருக்கும் பனிப்பாறைகள் நிகழ்காலத்தில் அதிகரித்து வரும் உலக வெப்பமயமாக்கலினால் வேகமாக உருகி வருகின்றன.