இலங்கை
Typography

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய வடக்கு மாகாண மாவட்டங்கள் ஐந்திலும் அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் மார்ச் மாதம் 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 06.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 

அறிக்கை ஒன்றை வௌியிட்டு ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இந்த மாவட்டங்களில் காலை 06.00 மணிக்கு நீக்கப்படும் ஊடரங்கு சட்டம் மதியம் 02.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.

மேலும், வடக்கின் 5 வடமாவட்டங்களில் வாசிக்கும் மக்கள் தமது மாவட்டங்களில் இருந்து வெளியேறுவது தடை செய்யப்பட்டுள்ளது .

யாழ்ப்பாணம் அரியாலை கண்டி வீதியில் அமைந்துள்ள பிலதெனியா தேவாலயத்திற்கு சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்த தலைமை போதகரை சந்தித்த மற்றும் போதனையில் கலந்து கொண்ட அனைவரையும் இனங்காணும் வரையில் இந்த பயணத் தடை நீடிக்கப்படும்.

குறித்த 5 மாவட்டங்களில் வசிக்கும் மக்களை கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வடக்கின் வசிக்கும் மக்களை பாதுகாக்கும் நோக்கில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக்கு வடக்கின் அனைத்து மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அரசாங்கம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதனிடையே, பொலிஸ் அனுமதியின்றி, ஏ9 வீதியில் பயணம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்