இலங்கை

ஊரடங்கு வேளையிலும் மருந்தகங்களை திறந்து வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக, நாளாந்தம் வைத்திய நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் மூலம் மருந்துகளை பெற்றுக் கொள்வதில், பெரும்பாலான நோயாளிகள் சிரமத்தை எதிர் கொண்டுள்ளதால் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்நிலைமையை கருத்திற்கொண்டு சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சினால் விசேட திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, தேவைக்கேற்ற வகையில், நாடு முழுதிலும் உள்ள அனைத்து மருந்தகங்களையும் திறக்க அனுமதிக்குமாறு, சுகாதார அமைச்சினால், பதில் பொலிஸ் மாஅதிபருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், நோயாளியின் நோய் நிலை மற்றும் மருந்துச்சிட்டை ஆகியவற்றை, ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக கருதுமாறு சுகாதார அமைச்சு பதில் பொலிஸ் மாஅதிபருக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதற்காக மருந்தக ஊழியர்களுக்கும் மருந்துப் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கும் அனுமதி வழங்குமாறு சுகாதார அமைச்சகம் பதில் பொலிஸ் மாஅதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு வருவதால் கொரோனா தொற்று பரவலாமென பயப்படத் தேவையில்லை. சுகாதார நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதற்காக 1,000 கோடி ரூபா என்ற பெருந் தொகைப் பணத்தை ஒதுக்கியிருக்கின்றோம்.” என்று தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

“முஸ்லிம் மக்களை தவறாக வழிநடத்தி அதிகாரத்திற்கு வந்த முஸ்லிம் தலைவர்கள் எனது ஆட்சிக் காலத்திலும் இருந்தனர். ஆனால், அனைத்து இன மக்களையும் ஜனநாயக உரிமைகளுடன் வாழ வைப்பதே எமது இலக்கு.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். 

இந்திய மத்திய மந்திரிசபை நவம்பர் மாதம் வரை ஏழைமக்களுக்கு இலவச அரிசி மற்றும் பருப்பு வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சாத்தான்குளம் போலீசார் விசாரணையில் உயிரிழந்த தந்தை-மகன் சம்பவத்தையடுத்து தமிழ்நாட்டில் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பினருக்கு அரசு தடை விதித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று நோய்களின் அதிக ஆபத்து இருப்பதாக அறிவிக்கப்பட்ட 13 நாடுகளுக்கு இத்தாலி தனது எல்லைகளை மூடுவதாக அறிவித்துள்ளது.

கொரோனா வைரசின் கடும் பாதிப்புக்குள்ளான நாடுகளில் ஒன்றான இத்தாலியில், தலையொட்டிப்பிறந்த இரட்டையர்களை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாகப் பிரித்து, மருத்துவ உலகில் மகத்தான சாதனை புரிந்துள்ளார்கள் இத்தாலிய மருத்துவர்கள்.