இலங்கை
Typography

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய பொலிஸாரினால் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் தற்போது பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொதுமக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளின்போது அவர்களுக்கு ஏற்படும் சமூக பிரச்சினைகளை பூர்த்தி செய்வதற்காக பொலிஸார் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

பொதுமக்களுடன் நெருக்கமாக செயற்படும் நிறுவனமான இலங்கை பொலிஸ் ஆனது அவர்களுக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கு எப்போதும் முன்னிற்கும் என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அந்த வகையில், நோய் நிலைமை, மின்சாரம், நீர் விநியோக தடைகள், மருந்து தேவைகள் உள்ளிட்ட ஏனைய சமூக தேவைகளை பூர்த்தி செய்ய, பின்வரும் தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

119
0112 44 44 80
0112 44 44 81

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அரசாங்கத்தினால் நிறுவப்பட்டுள்ள விசேட தனிமைப்படுத்தல் நிலையங்களின் மூலம் அல்லது தங்களது வீடுகளில் சுய தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

ஆயினும், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்களாக இருந்தும், அதனைத் தவிர்த்து நாட்டின் பல பகுதிகளிலும் பலர் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அவர்கள் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் மேற்படி தொலைபேசிகளைத் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்