இலங்கை
Typography

மிருசுவில் படுகொலை சம்பவம் தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இராணுவ வீரரான சுனில் ரத்நாயக்க, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

2000ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் திகதி யாழ். மிருசுவில் இராணுவ முகாமுக்கு அருகில் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது, 8 அப்பாவி தமிழர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றம் சுனில் ரத்நாயக்கவுக்கு மரண தண்டனை விதித்தது.

இந்நிலையில் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்ட இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க இன்று வியாழக்கிழமை வீடு திரும்பியுள்ளார் என சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மிருசுவில் படுகொலையில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவச் சிப்பாய்க்கு பொதுமன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார் என அண்மையில் ஆதவன் செய்தி சேவை செய்தி வெளியிட்டிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, குறித்த இராணுவ வீரருக்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டித்துள்ளது.

அது தொடர்பில் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், ‘மிருசுவில் வழக்கில் குற்றவாளியாக காணப்பட்டு தண்டிக்கப்பட்ட சார்ஜண்ட் சுனில் ரட்ணாயக ஜனாதிபதியின் மன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்பட்ட செய்தி உண்மையாயின் அது கடுமையாக கண்டிக்கப்படத் தக்கது. பல இவ்வாறான வழக்குகள் முன்னெடுக்கப்படாத நிலையிலும் வேறு பலர் மேன்முறையீட்டில் விடுவிக்கப்பட்ட போதும் இந்த ஒருவர் தான் அவற்றிற்கு விதிவிலக்காக இருந்தவர். இலங்கையில் இவ்வாறான குற்றங்கள் தண்டிக்கப்பட மாட்டா என்பதை இது உறுதி செய்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்