இலங்கை

கலைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத்தைக் மீண்டும் கூட்டுவதா, இல்லையா என்பது தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை கோரியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் நீடித்து வரும் நிலையில், ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தின் கீழ் பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. அதன்மூலம், கூட்டு செயன்முறையொன்றை முன்னெடுக்க முடியும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன.

இந்த நிலையில், பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவது தொடர்பில் வலியுறுத்தி தேர்தல் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு அண்மையில் கடிதமொன்றை எழுதியிருந்தது.

இதனையடுத்தே, பாராளுமன்றத்தைக் கூட்டுவதா, இல்லையா என்பது தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஜனாதிபதி ஆலோசனை கோரியுள்ளார்.

 

இரட்டைக் குடியுரிமையுள்ளவர்கள், பாராளுமன்றம் செல்லலாம் என்கிற அரசியலமைப்பு திருத்தமானது பிரிவினை கோரும் புலம்பெயர் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களையும் பாராளுமன்றத்துக்கு கொண்டு வரும் சூழலை ஏற்படுத்திவிடும் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 

20வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலம் இலங்கையில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், பேச்சு மற்றும் தகவல் அறிவதற்கு இருந்து வருகின்ற சுதந்திரத்துக்குத் தீங்கிழைக்கப்பட்டுள்ளது என்று இலங்கையின் ஊடக அமைப்புக்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான விடையை Virologist திரு ஷாஹித் ஜமீல் அவர்களை திரு கரண் தபார் எடுத்த பேட்டியில் இருந்து அறிய முடியும் ICMR தலைவர் திரு பல்ராம் பார்கவா கொரோனாவை நாம் கட்டுக்குள் வைத்துள்ளோம் என கூறியுள்ளார்

வருகிற அக்டோபர் 5 ஆம் திகதி வரை டெல்லியில் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண் சிறுமிகளின் கல்வி உரிமை தொடர்பான புரட்சியாளரும், மிக இளவயதில் சமாதானத்துக்கான நோபல் பரிசை வென்றவருமான பாகிஸ்தானைச் சேர்ந்த தன்னார்வலரான மலாலா யூசுஃப்சாய் அதிர்ச்சி தரும் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

ஈரான் அமெரிக்கா இடையே வர்த்தகப் போர் முற்றி வரும் நிலையில், ஈரான் மீது மீண்டும் பாரிய பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்காவுக்கு உரித்தில்லை என ஐ.நா பாதுகாப்புச் சபையின் ஏனைய முக்கிய உறுப்பு நாடுகளான பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகள் தெரிவித்துள்ளன.