இலங்கை

“ஒரு மாதத்துக்கும் மேலாக, கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டம் இந்த நாட்டுக்குள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், தேர்தலொன்றை நடத்துவதென்பது, இத்தனை நாள்களாக முன்னெடுத்த போராட்டத்தை வீண் விரயமாக்கிவிடும்.” என்று முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், “இலங்கையிலிருந்து நூற்றுக்கு நூறு விகிதம் கொரோனா ஒழிக்கப்படும் வரையில், தேர்தலை ஒத்திவைப்பதே சிறந்ததென்றும் அதுவே மக்களுக்குப் பாதுகாப்பானது.

தேர்தலெனச் சொல்லப்படுவது, தேர்தல் தினத்தில் வாக்குச் சாவடிக்குச் சென்று புள்ளடி போடுவது அல்ல. ஒவ்வொரு வேட்பாளரும் ஒவ்வொரு கட்சியும், சில வாரங்களாகவே உழைத்து, மக்களை ஒன்றுதிரட்ட வேண்டும்.

வீடு வீடாகச் சென்று, வேட்பாளர்கள் பற்றிய அறிவிப்புப் பத்திரங்களை வழங்க வேண்டும். தங்களுடைய கட்சியின் கொள்கைகளை வெளிப்படுத்த வேண்டும். பொதுத் தேர்தல் எனும் போது, ஆயிரக்கணக்கான வேட்பாளர்களும், தங்களுக்கான வேட்பாளர் இலக்கம் பற்றி, பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

அத்துடன், வாக்கெடுப்பு தினத்தில், பல பாடசாலைகளை, வாக்கெடுப்பு நிலையங்களாகப் பயன்படுத்த நேரிடும். வாக்கெடுப்புக்குப் பின்னரான 48, 72 மணித்தியாலங்கள் வரை, அரச ஊழியர்கள், சில அரச கட்டடங்களில் திரண்டு, வாக்குகளை எண்ண வேண்டும். இவ்வாறான பணிகளை முன்னெடுக்கவேண்டிய நிலையில், கொரோனா பின்னணியில் தேர்தலை நடத்துவது, பல உயிர்களைக் காவுகொடுப்பதாகிவிடும்.

எவ்வாறாயினும், தேர்தலை நடத்தும் வரையில், கொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக, பாராளுமன்றம் ஊடாக நிதி ஒதுக்கீடுகளைச் செய்துகொள்ள வேண்டுமாயின், ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, பாராளுமன்றத்தைக் கூட்டி அதைப் பெற்றுக்கொள்ளலாம். எதிர்க்கட்சியினர் என்ற வகையில் ஜனாதிபதிக்கு அதற்காக ஒத்துழைப்பு வழங்க, நாங்கள் தயார்.” என்றுள்ளார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடந்த காலச் செயற்பாடுகள் தொடர்பில் தமிழ் மக்கள் மதிப்பீட்டைச் செய்ய வேண்டும். அதன் பின்னரே, இம்முறை வாக்களிக்க வேண்டும்.” என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். 

“எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவரும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக எனது படத்தினை பயன்படுத்தக் கூடாது.” என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். 

சிபிசிஐடி போலீசார் விசாரணை கீழ் கொண்டுவரப்பட்ட சாத்தான்குளம் வியாபாரிகள் காவல்நிலையத்தில் உயிரிழந்த வழக்கு மதுரை உயிர் நீதிமன்றகிளையில் நடைபெற்றுவருகிறது.

கோவிட்-19 வைரஸின் பெருந்தொற்று உலகப் பேரிடராக மாறி இந்தியாவில் 6 லட்சம் பேர் தொற்றுக்கு ஆளாகினர்.

வடக்கு மியான்மரில் உள்ள சுரங்கம் ஒன்றில் நிலச்சரிவு ஏற்பட்டதில் குறைந்தது 113 பேர் வரை பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீன நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஹாங்கொங்கில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வருவதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. இதன் மூலம் ஹாங்கொங்கின் தன்னாட்சி அதிகாரம் முற்றிலும் ஒழிக்கப் பட்டு விட முடியும் என விமரிசகர்கள் எச்சரித்துள்ளனர்.