இலங்கை

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள பொதுத் தேர்தலை எப்போது நடந்துவது என்பது தொடர்பில் தீர்மானிப்பதற்கான விசேட கலந்துரையாடலொன்றை தேர்தல் ஆணைக்குழு எதிர்வரும் 20ஆம் திகதி நடத்தவுள்ளது. 

குறித்த கலந்துரையாடலின் பின்னர், சுகதார அதிகாரிகள், பாதுகாப்பு தரப்பினருடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் கலந்துரையாட தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொதுத் தேர்தலை வரும் யூன் மாத முதல் வாரத்துக்குள் நடத்துவதற்கு அரசாங்கம் ஆர்வம் காட்டி வரும் நிலையில், பொதுத் தேர்தலை அந்தக் காலப்பகுதிக்குள் நடத்துவதற்கான சூழல் இல்லை என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. இந்த நிலையிலேயே, தேர்தல் ஆணைக்குழு விசேட சந்திப்பை நடத்தவுள்ளது.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடந்த காலச் செயற்பாடுகள் தொடர்பில் தமிழ் மக்கள் மதிப்பீட்டைச் செய்ய வேண்டும். அதன் பின்னரே, இம்முறை வாக்களிக்க வேண்டும்.” என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். 

“எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவரும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக எனது படத்தினை பயன்படுத்தக் கூடாது.” என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். 

சிபிசிஐடி போலீசார் விசாரணை கீழ் கொண்டுவரப்பட்ட சாத்தான்குளம் வியாபாரிகள் காவல்நிலையத்தில் உயிரிழந்த வழக்கு மதுரை உயிர் நீதிமன்றகிளையில் நடைபெற்றுவருகிறது.

கோவிட்-19 வைரஸின் பெருந்தொற்று உலகப் பேரிடராக மாறி இந்தியாவில் 6 லட்சம் பேர் தொற்றுக்கு ஆளாகினர்.

வடக்கு மியான்மரில் உள்ள சுரங்கம் ஒன்றில் நிலச்சரிவு ஏற்பட்டதில் குறைந்தது 113 பேர் வரை பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீன நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஹாங்கொங்கில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வருவதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. இதன் மூலம் ஹாங்கொங்கின் தன்னாட்சி அதிகாரம் முற்றிலும் ஒழிக்கப் பட்டு விட முடியும் என விமரிசகர்கள் எச்சரித்துள்ளனர்.