இலங்கையில் (நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரையான காலப்பகுதியில்) கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 244ஆக அதிகரித்துள்ளது.
நேற்று 06 பேர் கொரோனா தொற்றுக்களுடன் அடையாளம் காணப்பட்டனர். அதேநேரம், 09 பேர் குணமடைந்துள்ளனர்.
அந்த வகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டுள்ள 244 பேரில் தற்போது 160 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 77 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் இது வரை 07 பேர் மரணமடைந்துள்ளனர்.
அத்துடன் மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 148 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.
அடையாளம் - 244
குணமடைவு - 77
இன்று அடையாளம் - 06
இன்று குணமடைவு - 09
சிகிச்சையில் - 160
மரணம் - 07