இலங்கை

“ஜனாதிபதிக்கு எதிராக அரசியல் குற்றவியல் பிரேரணை எதனையும் கொண்டு வர மாட்டோம். உடனடியாக பாராளுமன்றத்தைக் கூட்டுங்கள்.” என்று முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

நேற்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

சஜித் பிரேமதாச மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “இலங்கையின் பொருளாதாரம் தற்போது எதிர்கொண்டுள்ள மிக மோசமான நிலைமையை எதிர்கொள்வதற்காக பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டவேண்டும். நாளாந்தம் மக்களின் பொருளாதார நிலைமை மோசமடைந்து வருகின்றது. பாராளுமன்றத்தை மீள கூட்டுவது மிகவும் அவசியம், அதன் மூலம் நிலைமை மேலும் மோசமடைவதை கட்டுப்படுத்தலாம்.

கொரோன வைரசினால் பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்கு ஆதவளிப்பதாக அரசாங்கம் உறுதியளித்தது. எனினும் இந்த வாக்குறுதி வெறும் ஆவணத்துடன் மட்டுப்படுத்தப்பட்டுவிட்டது.

பாராளுமன்றம் கூட்டப்பட்டால் ஜனாதிபதிக்கு எதிராக அரசியல் குற்றப்பிரேரணையை கொண்டுவரமாட்டோம், பாராளுமன்ற உறுப்பினர்களிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவரமாட்டோம்.” என்றுள்ளார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான மறைந்த ஆறுமுகம் தொண்டமானுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சற்றுமுன்னர் (இன்று புதன்கிழமை) அஞ்சலி செலுத்தினார். 

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் (வயது 56) சற்றுமுன்னர் (இன்று செவ்வாய்க்கிழமை) காலமானார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் லாக்டவுன் தாக்கத்துடன் ஏற்கனவே போராடிக்கொண்டு இருக்கும் விவசாயிகளின் நிலங்களை பெரும் அளவிலான வெட்டுக்கிளிகள் அழித்துவருகின்றன.

நாடு தழுவிய பொதுமுடக்கம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே மத்தியில் ஆளும் பாஜக அரசு திரைமறைவில் பல்வேறு மக்கள் விரோதத் திட்டங்களை அரங்கேற்றி வருகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ஹாங்கொங்கை சீனாவிடம் இருந்து தன்னாட்சி பெற்ற தேசமாக இனியும் கருத முடியாது என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளாரன மைக் பொம்பெயோ அமெரிக்க காங்கிரஸில் டிரம்ப் நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.

Worldometers இணையத் தளத்தின் அதிகாரப்பூர்வ சமீபத்திய தகவல் படி உலகம் முழுதும் 213 நாடுகளில் பரவியிருக்கும் கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முக்கிய புள்ளி விபரம் கீழே :