இலங்கை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்றத்தை கலைத்து வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை வலுவிழக்க செய்யக்கோரி ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் உயர்நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணி தினேஷ் விதான பத்திரண ஊடாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், அரசியலமைப்புக்கு அமைய பாராளுமன்றம் கலைக்கப்பட்டு மூன்று மாதங்களுக்குள் பொதுத் தேர்தல் நடாத்தப்பட்டு புதிய பாராளுமன்றம் கூட்டப்படல் வேண்டும் எனவும், அதன்படி ஜனாதிபதியால் கடந்த மார்ச் 02ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில், தேர்தல் ஏப்ரல் 25 இடம்பெறும் என அரிவிக்கப்பட்டிருந்ததாகவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் தற்போது அந்த திகதி ஜூன் 20 என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் அது அரசியல் அமைப்பை மீறும் நடவடிக்கை எனவும் அதனால் ஜனாதிபதியின் வர்த்தமானியை வலுவற்றது என அறிவிக்குமாறும் அகில விராஜ் காரியவசம் தனது மனுவில் கோரியுள்ளார். இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவில் ஜனாதிபதி சார்பில் சட்ட மா அதிபர், பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு விமானப்படையினரின் தாக்குதலில் உயிரிழந்த 54 மாணவிகள் உள்ளிட்ட 61 பேரின் 14ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளில் இருந்து விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார். 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி; வெளிப்படையாகவும் நேர்மையாகவும் வரி செலுத்துவோரை கௌரவித்தல் எனும் புதிய திட்டத்தை இன்று காணொலி மூலம் ஆரம்பித்துவைத்தார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.