இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தைத் தொடர்ந்து யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மத்தள மற்றும் இரத்மலானை விமான நிலையங்களில் பயணிகள் சேவைகளை விரிவுபடுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் நாட்டிற்குள் பரவுவதை தடுக்க பல மாற்று நடவடிக்கைகளில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறதென்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

“ஆண்டுதோறும், 10 முதல் 12 மில்லியன் பயண நடவடிக்கைகள் கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக நடைபெறுகின்றன, இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 18 முதல் 20 மில்லியன் வரை உயருமென மதிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் காரணமாக உலகம் முழுவதும் விமான சேவைகள் தடைப்பட்டுள்ளன, இதனால் உலகிலுள்ள அனைத்து விமான நிலைய சேவைகளும் சரிவடைந்துள்ளதாக கூறிய அவர், சுகாதாரத் தரப்பு ஆலோசனையுடன் ஏனைய விமான நிலையங்களையும் திறக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான மறைந்த ஆறுமுகம் தொண்டமானுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சற்றுமுன்னர் (இன்று புதன்கிழமை) அஞ்சலி செலுத்தினார். 

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் (வயது 56) சற்றுமுன்னர் (இன்று செவ்வாய்க்கிழமை) காலமானார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் லாக்டவுன் தாக்கத்துடன் ஏற்கனவே போராடிக்கொண்டு இருக்கும் விவசாயிகளின் நிலங்களை பெரும் அளவிலான வெட்டுக்கிளிகள் அழித்துவருகின்றன.

நாடு தழுவிய பொதுமுடக்கம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே மத்தியில் ஆளும் பாஜக அரசு திரைமறைவில் பல்வேறு மக்கள் விரோதத் திட்டங்களை அரங்கேற்றி வருகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ஹாங்கொங்கை சீனாவிடம் இருந்து தன்னாட்சி பெற்ற தேசமாக இனியும் கருத முடியாது என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளாரன மைக் பொம்பெயோ அமெரிக்க காங்கிரஸில் டிரம்ப் நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.

Worldometers இணையத் தளத்தின் அதிகாரப்பூர்வ சமீபத்திய தகவல் படி உலகம் முழுதும் 213 நாடுகளில் பரவியிருக்கும் கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முக்கிய புள்ளி விபரம் கீழே :