இலங்கை

தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் விரைவில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப் படுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துதல் தொடர்பில் புதிய சட்ட நியதிகளை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் எத்தகைய அச்சுறுத்தல்களையும் முறையாகவும் வெற்றிகரமாகவும் எதிர்கொள்ளும் வகையில் இந்த புதிய சட்ட நியதிகள் உருவாக்கப்படுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொடர்பான நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, ‘உலகில் கொரோனா வைரஸ் தொற்று ஒழிப்பில் முன்னணியில் திகழ்வது இலங்கையாகும். மரண வீதம் 0.5 விட குறைவாகவே காணப்படுகிறது. அந்த வகையில் வைரஸ் தொற்று அச்சுறுத்தல் நாடுகளில் குறைந்த மரணம் வெற்றிகரமான வைரஸ் ஒழிப்பு என்ற ரீதியில் இலங்கை முன்னிலை வகிக்கின்றது.

இலங்கையைப் பொறுத்தவரை ஏனைய நாடுகளைப் போலன்றி நாட்டில் முதலாவது வைரஸ் தொற்று நோயாளி இனங்காணப்பட்ட உடனேயே வைரஸ் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்து விட்டது. எனினும் ஏனைய நாடுகள் வைரஸ் தொற்று பரவல் அதிகமாகி மோசமான நிலை உருவாகிய பின்பே முறையான செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளன.

அதேவேளை கொரரோனா வைரஸ் கட்டுப்படுத்துதல் தொடர்பில் புதிய சட்ட நியதிகளை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதற்காக குழு ஒன்று நியமிக்கப்பட்டு அக்குழுவினரின் சிபாரிசு பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.” என்றுள்ளார்.

“எமது நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருந்தால், எம்மைப் புறந்தள்ளிவிட்டு ஒரு அரசியலமைப்பினை அரசாங்கத்தினால் உருவாக்க முடியாது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

“எமது மக்களின் உரிமைகளுக்காக தமது உயிர்களைத் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான உரிமை மறுக்கப்பட்டிருப்பது கொடுமையிலும் கொடுமையாகும்.” என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

7 மாநில முதல் மந்திரிகளுடனான கொரோனா ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்துரையாடினார்.

இன்று அதிகாலை குஜராத்தில் உள்ள ஓ.என்.ஜி.சி ஆலையில் திடிரென தீ விபத்து ஏற்பட்டது.

நாளை வெள்ளிக்கிழமை முதலான வார இறுதி நாட்களில், சுவிற்சர்லாந்தின் பல பகுதிகளில் பனிப்பொழிவு இடம்பெறலாம் என சுவிஸ் வானிலை மையம் அறிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்தின் புகழ்பெற்ற லொசேன் ஈ.எச்.எல் ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மென்ட் கல்விக் கூடத்தில் சுமார் 2,500 மாணவர்கள், கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என பிராந்திய அதிகாரிகள் நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளனர்.