இலங்கை

கிளிநொச்சி- முகமாலைப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை புலிச் சீருடைகள், ஆயுதங்களுடன் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

குறித்த பகுதிக்கு நேற்று மாலை வருகை தந்த கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி, மனித எச்சங்களைப் பார்வையிட்டதுடன், எதிர்வரும் 26ஆம் திகதி அகழ்வு பணிகளை முன்னெடுக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் இடம்பெற்ற வரும் நிலையில் மனித எச்சங்கள் காணப்பட்டன. அவற்றுடன் துப்பாக்கியும் காணப்பட்டதுடன் விடுதலைப் புலிகளின் சீருடையும் காணப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ள நிறுவன ஊழியர்களால் பளை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவந்த பொலிஸார் குறித்த இடத்தில் அகழ்வினை மேற்கொள்ள கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றின் அனுமதியை கோரியிருந்தனர்.

முகமாலைப் பகுதியானது, 2001ஆம் ஆண்டிலிருந்து 2008ஆம் ஆண்டு வரையில் விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலையாக காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு விமானப்படையினரின் தாக்குதலில் உயிரிழந்த 54 மாணவிகள் உள்ளிட்ட 61 பேரின் 14ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளில் இருந்து விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார். 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி; வெளிப்படையாகவும் நேர்மையாகவும் வரி செலுத்துவோரை கௌரவித்தல் எனும் புதிய திட்டத்தை இன்று காணொலி மூலம் ஆரம்பித்துவைத்தார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.