இலங்கை

கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் குறித்து முழுமையான ஆய்வொன்றை மேற்கொண்டு அவற்றை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்காக பாதுகாப்பு செயலாளர் தலைமையில் செயலணியொன்று உருவாக்கப்படும் என கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

பௌத்த ஆலோசனை சபையினருடான நேற்றைய (வெள்ளிக்கிழமை) சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்குள் கடத்தி வரப்பட்ட பெருந்தொகையான போதைப்பொருட்கள் குறுகிய காலத்தில் கைப்பற்றப்பட்டுள்ளன என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நாட்டில் போதைப்பொருள் தொடர்பில் தற்போது காணப்படும் நிலையை கட்டுப்படுத்துவதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன் என தெரிவித்துள்ள ஜனாதிபதி, நாட்டிலிருந்து போதைப்பொருள் பிரச்சினையை முற்றாக ஒழிப்பதற்குமான நடவடிக்கையையும் எடுப்பேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பாக எனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை உயர்ந்த அளவில் நிறைவேற்றுவேன் என தெரிவித்துள்ள ஜனாதிபதி, இந்த நோக்கத்திற்காக நிபுணத்துவம் மிக்கவர்களை திறமை வாய்த்தவர்களை இந்த பணிக்காக நியமித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரங்களை கையாள்வதற்கு புலனாய்வு பிரிவினருக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

பயங்கரவாத தீவிரவாத நடவடிக்கைகளை உன்னிப்பாக அவதானிப்பதற்கான அதிகாரம் பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான மறைந்த ஆறுமுகம் தொண்டமானுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சற்றுமுன்னர் (இன்று புதன்கிழமை) அஞ்சலி செலுத்தினார். 

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் (வயது 56) சற்றுமுன்னர் (இன்று செவ்வாய்க்கிழமை) காலமானார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் லாக்டவுன் தாக்கத்துடன் ஏற்கனவே போராடிக்கொண்டு இருக்கும் விவசாயிகளின் நிலங்களை பெரும் அளவிலான வெட்டுக்கிளிகள் அழித்துவருகின்றன.

நாடு தழுவிய பொதுமுடக்கம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே மத்தியில் ஆளும் பாஜக அரசு திரைமறைவில் பல்வேறு மக்கள் விரோதத் திட்டங்களை அரங்கேற்றி வருகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ஹாங்கொங்கை சீனாவிடம் இருந்து தன்னாட்சி பெற்ற தேசமாக இனியும் கருத முடியாது என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளாரன மைக் பொம்பெயோ அமெரிக்க காங்கிரஸில் டிரம்ப் நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.

Worldometers இணையத் தளத்தின் அதிகாரப்பூர்வ சமீபத்திய தகவல் படி உலகம் முழுதும் 213 நாடுகளில் பரவியிருக்கும் கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முக்கிய புள்ளி விபரம் கீழே :