இலங்கை

“தேர்தல் ஆணைக்குழுவின் தீர்மானங்களில் வெளிச்சக்தியொன்று செல்வாக்கு செலுத்துகின்றது. அந்த சக்தியே யூன் 20ஆம் திகதி தேர்தலை நடத்தவிடாமல் தடுக்கின்றது.” என்று அரசாங்க பேச்சாளரும் முன்னாள் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல குற்றஞ்சாட்டியுள்ளார். 

யூன் 20ஆம் திகதி தேர்தலை நடத்த முடியாது என்பதற்கு தேர்தல் ஆணைக்குழு முன்வைத்த காரணங்களை புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழு முன்வைத்துள்ள குழப்பமான கருத்துக்களாலும் ஏனைய காரணங்களாலும் வெளிச்சக்தியொன்றின் தலையீடு இருப்பதாக உணர முடிகின்றது. தேர்தல் ஆணைக்குழுவின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணியை அரசியல் நோக்கத்துடன் நியமிக்கப்பட்டவர், பக்கச்சார்பானவர்.” என்றும் கெஹெலிய ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார்.

“காணாமற்போனவர்கள் குறித்த அலுவலகத்திற்காக அரசியல் ரீதியில் ஐக்கிய தேசியக் கட்சியால் நியமிக்கப்பட்டவரே தற்போது தேர்தல் ஆணைக்குழுவின் சார்பில் நீதிமன்றில் ஆஜராகியுள்ளார். அதற்கு முன்னர் அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினராகயிருந்தவர். அவர் அரசியல் பின்னணியை கொண்ட பக்கச்சார்பான சட்டத்தரணி என கருதப்பட்டவர். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு திட்டமிடப்பட்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கருதுகின்றேன்.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு விமானப்படையினரின் தாக்குதலில் உயிரிழந்த 54 மாணவிகள் உள்ளிட்ட 61 பேரின் 14ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளில் இருந்து விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார். 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி; வெளிப்படையாகவும் நேர்மையாகவும் வரி செலுத்துவோரை கௌரவித்தல் எனும் புதிய திட்டத்தை இன்று காணொலி மூலம் ஆரம்பித்துவைத்தார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.