இலங்கை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாக மக்கள் கடும் அழுத்தம் மற்றும் விரக்திநிலையின் கீழ் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என்று முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

இறக்குமதி செய்யப்படும் உணவுப்பொருட்கள் மீதான வரியை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் முடிவை மிகவும் கடுமையான நடவடிக்கை என அவர் வர்ணித்துள்ளார்.

தாங்கள் பாதுகாக்கப்படுவார்கள் சிறந்த வாழ்க்கை தரம் உறுதிசெய்யப்படும் என்ற எதிர்பார்ப்பிலேயே மக்கள் அரசாங்கத்தை தெரிவு செய்கின்றனர் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எனினும் தற்போதைய அரசாங்கம் மக்கள் மீது வரிகளை சுமத்துகின்றது,பொருட்களின் விலைகளை அதிகரிக்கின்றது வாழ்க்கை செலவு விண்ணை எட்டும் நிலையை உருவாக்கியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் மற்றும் முடக்கல் காரணமாக தாங்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளால் மக்கள் ஏற்கனவே அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அவ்வாறான தருணத்தில் அரசாங்கம் மக்களிற்கு சலுகைகளை வழங்கவேண்டும் எனினும் 6.9மில்லியன் மக்களின் வாக்குகளுடன் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இதற்கு எதிர்மாறான விதத்தில் செயற்படுகின்றது என கூறியுள்ளார்.

மக்கள் மீது சுமைகளை சுமத்துவதற்கு எதிராக வீதிகளில் ஜனநாய மோதல்கள் இடம்பெறும் என தெரிவித்துள்ள சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தி மக்களிற்கு ஆதரவாக நிற்க்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கைக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவில் மீண்டும் ஒரு முறை பன்றிகளிடம் இருந்து மனிதர்களிடையே பரவும் புதிய வகை வைரஸ் கண்டு பிடிக்கப் பட்டிருப்பதாகவும், இதுவும் கொரோனா போன்று பரவக் கூடும் என்றும் சமீபத்தில் ஊடங்களிடையே பரபரப்புச் செய்தி வெளியாகி இருந்தது.

3 மாதத்துக்கும் அதிகமான கடுமையான லாக்டவுன் காலத்தை அடுத்து இங்கிலாந்தில் இன்று சனிக்கிழமை முதற்கொண்டு பப்களும், உணவு விடுதிகளும் திறப்பதற்கு அனுமதியளிக்கப் பட்டுள்ளது.