இலங்கை

பொதுத் தேர்தல் தொடர்பாக உயர்நீதிமன்றம் தனது முடிவை வெளியிட்ட தினத்திலிருந்து 70 நாட்கள் தேர்தல் குறித்த நடவடிக்களை பூர்த்திசெய்வதற்கு அவசியம் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை பூர்த்தி செய்வதற்கு 70 நாட்கள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அவசியம் என தேர்தல் ஆணையகத்தின் இயக்குநர் சமன் ரத்தினாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தலை நடத்தும் போது வாக்காளர்களையும் தேர்தல் பணியாளர்களையும் பாதுகாப்பதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணையகம் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘இது குறித்த மேலதிக பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன. எதிர்வரும் தேர்தலிற்கு மேலதிக பணியாளர்கள் தேவைப்படுவார்கள். சமூக விலக்கலை பின்பற்றுவதற்காக மேலதிக வளங்கள் தேவைப்படும்’ என தெரிவித்துள்ள அவர், தேர்தல் செலவு அதிகரிக்கும் எனவும் கூறியுள்ளார்.

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தெற்கு மக்களின் வாக்குகளினால் வெற்றி பெற்றுள்ள போதிலும், வடக்கு –கிழக்கு மக்களை நாங்கள் கைவிட மாட்டோம்.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

“வடக்கு –கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் அனைவரும் ஓரணியாக நிற்க வேண்டும். அதன்மூலமே பலமான சக்தியாக பாராளுமன்றத்துக்குள் எம்மால் இருக்க முடியும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவிலிருந்து மின் சாதனங்களை இறக்குமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளது.

Worldometer இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளிவிபரம் :

பாகிஸ்தானில் ரயில் ஒன்றின் மீது வேன் மோதியதில் சீக்கிய யாத்ரீகர்கள் பலியாகியுள்ளனர்.