இலங்கை

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான மறைந்த ஆறுமுகம் தொண்டமானுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சற்றுமுன்னர் (இன்று புதன்கிழமை) அஞ்சலி செலுத்தினார். 

உடல் நலக்குறைவினால் நேற்று மரணமடைந்த ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடன் கொழும்பில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு அரசியல் தலைவர்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதனிடையே, ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் மறைவை அடுத்து, இரா.சம்பந்தன் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.

அதில், “இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் அகால மரண செய்தி கேட்டு அதிர்ச்சியும் கவலையும் அடைகிறேன்.

மலையக மக்களிற்காக பாராளுமன்றத்திலும் வெளியிலும் ஒலித்த ஒரு குரல் இன்று மௌனித்து விட்டது. அமைச்சர் தொண்டமான் அவர்கள் அமரர் சௌமியமூர்த்தி தொண்டைமானின் வழியில் மலையக மக்களின் விடிவிற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஒரு தலைவராவார். அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதிகளில் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் நன்மை கருதி அநேக வேலைத்திட்டங்களை முன்னெடுத்த ஒரு தலைவராகவும் மக்களின் நலனை பிரதிபலிக்கும் வகையில் செயற்பட்ட ஒரு மக்கள் தலைவராகவும் செயற்பட்டார்.

அன்னாரது மறைவானது மலையக மக்களிற்கு மாத்திரமல்லாது முழு இலங்கை வாழ் மக்களிற்கும் ஒரு பாரிய இழப்பாகும். அமரர் சௌமியமூர்த்தி தொண்டைமானின் மறைவிற்கு பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரசிற்கு தலைமைத்துவம் கொடுத்து மலையக மக்களின் மனங்களில் நீங்கா இடம்பிடித்த ஒரு தலைவராக கௌரவ ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் இவ்வுலகை விட்டு நீங்கிவிட்டார்கள்.

இந்த துயரமான சந்தர்ப்பதில் அன்னாரின் இழப்பால் தவிக்கும் அவரது கும்பத்தினருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். மலையக மக்களின் உயர்விற்கும் விடிவிற்க்கும் அன்னார் முன்னெடுத்த முயற்சிகளை அயராது தொடர்ந்தும் முன்னெடுப்பதன் மூலம் அம்மக்களின் உயர்வினை உறுதி செய்வதே அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாக இருக்கும். அன்னாரது ஆன்ம சாந்திக்காக எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.” என்றுள்ளது.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார். 

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். 

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவிலிருந்து மின் சாதனங்களை இறக்குமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளது.

பாகிஸ்தானில் ரயில் ஒன்றின் மீது வேன் மோதியதில் சீக்கிய யாத்ரீகர்கள் பலியாகியுள்ளனர்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் 2 ஆவது ஆட்சிக் காலத்தின் பதவிக் காலம் 2024 ஆமாண்டுடன் நிறைவுறுகின்றது.