இலங்கை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் சர்ச்சைக்குரிய சிங்கள மொழி மூல நேர்காணல் குறித்து தமிழ்க் கூட்டமைப்பின் மூன்று பங்காளிக் கட்சிகளினதும் தலைவர்கள், நேற்று வியாழக்கிழமை மாலை கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தனை அவரது கொழும்பு இல்லத்தில் சந்தித்து முறைப்பாடு செய்துள்ளனர். 

தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா, ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் ஆகியோரே நேற்று மாலை சம்பந்தனைச் சந்தித்து சுமந்திரனின் சர்ச்சைக்குரிய நேர்காணல் குறித்தும், அவரின் நடவடிக்கைகள் குறித்தும் முறைப்பாடு செய்துள்ளனர்.

சுமந்திரனின் பேட்டி தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி அலைகளை எழுப்பி இருக்கின்றது. இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வரும் பொதுத் தேர்தலில் பெரும் பின்னடைவு ஏற்படும் அபாயம் நேர்ந்துள்ளது என்று பங்காளிக் கட்சியின் தலைவர்கள் மூவரும் சம்பந்தனிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஒரு குறிப்பிட்ட காலத்துக்காவது சுமந்திரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியில் இருந்து இடைநிறுத்தினால்தான் மக்கள் மத்தியில் இழந்த ஆதரவுத் தளத்தைத் தக்க வைக்கலாம் என ரெலோ செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தினார். ஆனாலும், அதற்கு சம்பந்தன் சாதகமான பதிலை வழங்கவில்லை.

இதனிடையே, இன்று வெள்ளிக்கிழமை சுமந்திரனையும் நேரில் அழைத்து விடயங்களை ஆராய்வோம் என்று கூறி சம்பந்தன் சந்திப்பினை முடிந்து வைத்துள்ளார்.

“அரசியல்வாதி என்ற அடிப்படையிலும் அமைச்சர் என்ற வகையிலும் இரண்டு வகையான பொறுப்புக்கள் என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவை இரண்டையும் நிறைவேற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பேன்.” என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளரும், கடற்றொழில்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டத்தை இல்லாது ஒழிக்கவுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி; வெளிப்படையாகவும் நேர்மையாகவும் வரி செலுத்துவோரை கௌரவித்தல் எனும் புதிய திட்டத்தை இன்று காணொலி மூலம் ஆரம்பித்துவைத்தார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.