இலங்கை

பொதுத் தேர்தலை நடத்துவதற்கான திகதி குறித்த வர்த்தமானி அறிவிப்பை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்வது தொடர்பான தீர்ப்பு இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 03.00 மணிக்கு உயர்நீதிமன்றால் வழங்கப்படவுள்ளது. 

மனுதாரர்கள், எதிர்மனுதாரர்கள் மற்றும் இடைபுகு மனுதாரர்களின் சமர்ப்பணங்கள் நேற்று திங்கட்கிழமை நிறைவடைந்த நிலையில் தீர்ப்பிற்காக உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

ஜூன் 20ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்த திகதி குறிப்பிட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை சவாலுக்குட்படுத்தும் அடிப்படை உரிமை மனுக்கள் உயர் நீதிமன்றால் நேற்று பத்தாவது நாளாக, பிரதம நீதியரசர் தலைமையிலான 5 நீதியரசர்கள் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு முன் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டன.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கைக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவில் மீண்டும் ஒரு முறை பன்றிகளிடம் இருந்து மனிதர்களிடையே பரவும் புதிய வகை வைரஸ் கண்டு பிடிக்கப் பட்டிருப்பதாகவும், இதுவும் கொரோனா போன்று பரவக் கூடும் என்றும் சமீபத்தில் ஊடங்களிடையே பரபரப்புச் செய்தி வெளியாகி இருந்தது.

3 மாதத்துக்கும் அதிகமான கடுமையான லாக்டவுன் காலத்தை அடுத்து இங்கிலாந்தில் இன்று சனிக்கிழமை முதற்கொண்டு பப்களும், உணவு விடுதிகளும் திறப்பதற்கு அனுமதியளிக்கப் பட்டுள்ளது.