இலங்கை

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மஹேந்திரனை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக 21,000 கையொப்பங்களை தான் இட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

அர்ஜூன் மஹேந்திரனை சிங்கப்பூரிலிருந்து இலங்கை அழைத்து வருவதற்காக நாட்டின் தலைவர் என்ற ரீதியில், சட்டமா அதிபர் வரைந்த ஆவணங்களில் தான் 21,000 தடவைகள் கைச்சாத்திட்டதாகவும், இதற்கு மூன்று நாட்கள் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொலனறுவையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மத்திய வங்கியின் ஆளுநர் பதவிக்கு சிங்கப்பூர் பிரஜையான அர்ஜூன் மஹேந்திரனை நியமித்த போது, தாம் அதனை வலுவான முறையில் ஆட்சேபித்ததாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஆட்சி அமைத்து, இரு வாரங்களுக்குள் தமக்கும் முன்னாள் பிரதமருக்கும் இடையில் பிணக்குகளை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என்பதற்காக அர்ஜூன் மஹேந்திரனின் நியமனத்தை ஏற்கும் நிர்ப்பந்தம் உருவானதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கைக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவில் மீண்டும் ஒரு முறை பன்றிகளிடம் இருந்து மனிதர்களிடையே பரவும் புதிய வகை வைரஸ் கண்டு பிடிக்கப் பட்டிருப்பதாகவும், இதுவும் கொரோனா போன்று பரவக் கூடும் என்றும் சமீபத்தில் ஊடங்களிடையே பரபரப்புச் செய்தி வெளியாகி இருந்தது.

3 மாதத்துக்கும் அதிகமான கடுமையான லாக்டவுன் காலத்தை அடுத்து இங்கிலாந்தில் இன்று சனிக்கிழமை முதற்கொண்டு பப்களும், உணவு விடுதிகளும் திறப்பதற்கு அனுமதியளிக்கப் பட்டுள்ளது.