இலங்கை

“தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே இருக்கின்றது. இந்தநிலையில், தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கும் நோக்குடன் மாற்று அணி, மாற்றுத் தலைமை என்ற பெயரில் பல கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றன. இந்தக் கட்சிகளையும், சுயேட்சைக் குழுக்களையும் தமிழ் மக்கள் தோற்கடிக்க வேண்டும். அதனூடாக தமிழர்களின் ஏகோபித்த கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பதைத் தமிழ் மக்கள் இம்முறையும் நிரூபித்துக்காட்ட வேண்டும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும், அரசியல் தீர்வுக்காகவும் பாராளுமன்றத்திலும் சர்வதேச அரங்கிலும் குரல் கொடுத்து வருகின்ற ஒரே கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே. அதனால்தான் மாறி மாறி ஆட்சிக்கு வரும் அரசுகளும், இலங்கை வரும் சர்வதேச பிரமுகர்களும் தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன்தான் பேச்சுகளை நடத்துகின்றனர்.

தமிழர்களின் உரிமைகளையும், அரசியல் தீர்வையும் வென்றெடுக்க நாம் ஓயாது பயணித்துக்கொண்டிருக்கின்றோம். இந்தப் பயணத்தின் இலக்கை அடைவது வெகுதூரத்தில் இல்லை. அதை நாம் அடைந்தே தீருவோம். சர்வதேசமும் எமது பக்கம் இருப்பதால் அந்த இலக்கை அடைவதை எவராலும் தடுத்துநிறுத்த முடியாது.

தமிழ் மக்களுக்கு நாம் உண்மையாகவே இருக்கின்றோம். அவர்களுக்கு நாம் துரோகமிழைக்கவில்லை. அதனால் அவர்கள் எம்மை முழுமையாக நம்புகின்றார்கள். அந்த நம்பிக்கையின் வெளிப்பாட்டை இம்முறை பொதுத்தேர்தலிலும் அவர்கள் வெளிப்படுத்துவார்கள் என்றே நாம் நம்புகின்றோம்” என்றுள்ளார்.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு பாரிய ஆபத்திற்கு முகம் கொடுக்கும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். 

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நேற்று திங்கட்கிழமை இரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. 

இந்தியாவைக் கடுமையாகத் தாக்கிவ வரும், கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை எதிர்கொள்ள ஒருபோதும் நாம் தயாராக இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் பொது முடக்க விதிகளைப் பொதுமக்கள் மதித்து நடக்கையில், அதனை மீறி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தியதாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்தாக அறிய வருகிறது.

சுவிற்சர்லாந்தில் நடைபெறும் தடுப்பூசி மையங்களுக்கு வரமுடியாதவர்களுக்கு, அவர்கள் இடங்களுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தினை, மே 18 முதல் வோ மாநிலம் ஆரம்பிக்கிறது.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அடுத்து அரசு என்னென்ன கொரோனா பாது காப்புவிதிகளை தளர்த்தும் ? எனும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.