இலங்கை

தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகள் அனைத்தும் விரைவாக வழங்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். 

தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளைக் கருத்தில் கொண்டே, தான் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேர்தல் செயற்பாட்டு அலுவலகம் இன்று வெள்ளிக்கிழமை ஹட்டனில் திறந்து வைக்கப்பட்டது. அந்த நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே சுரேன் ராகவன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “30 வருடகால போருக்கு பின்னர் அரசியலில் ஏற்பட்டுள்ள ஜனநாயக ரீதியிலான தாக்கம் இன்னும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஏற்படவில்லை என்று தான் கூற வேண்டும்.

ஏனெனில் கடந்த 10 ஆண்டுகளாக வடக்கு மாகாண மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்தில் இருந்த கட்சி மக்களுக்காக என்ன செய்துள்ளது? இந்த கேள்வியை எழுப்பும்போது அந்த கட்சியில் உள்ளவர்களே திருப்தியடையமுடியாத அளவுக்குதான் நிலைமை உள்ளது.

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தெளிவான வெற்றியைபெற்று, பலமானதொரு அரசாங்கத்தை அமைப்பதற்கான சூழ்நிலை ஜனாதிபதக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே, முட்டிமோதும் அரசியலை கைவிடுத்து போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றிணையவேண்டும். தமிழ் மக்களுக்கு கொடுக்கப்படவேண்டிய சாதாரண உரிமைகள் வழங்கப்படவேண்டும். இதற்கான பாதையை உருவாக்குவதற்காகவே நான் சுதந்திரக்கட்சியுடன் இருக்கின்றேன். மாபெரும் திட்டத்துடன் வடக்கு, கிழக்குக்கு வருவோம்.” என்றுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலகுவதற்கான அறிவிப்பினை விடுத்துள்ளார். 

எமது கொள்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொண்டால், எதிர்வரும் காலங்களில் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. 

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆந்திர மாநிலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிகிச்சை மையமாக இருந்த ஓட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10பேர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெய்ரூட்டில் ஏற்பட்ட மிகப்பெரும் நைட்ரஜன் வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200 ஆக உயர்வடைந்துள்ளது.

சுவிற்சர்லாந்தில் கோடைவிடுமுறை முடிந்து பாடசாலைகளுக்கான புதிய கல்வியாண்டு ஆரம்பமாகவுள்ளன. சுவிஸின் சில மாநிலங்களில் வரும் திங்கட்கிழமை பள்ளிகள் தொடங்குகின்றன.