இலங்கை

2011ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டியின் இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயச் சதி இடம்பெற்றதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே முன்வைத்த குற்றச்சாட்டுத் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

விளையாட்டுச் சட்டங்கள் தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்கான விசேட விசாரணைப் பிரிவுக்கு தான் வழங்கிய எழுத்து மூலமான வேண்டுகோளை அடுத்து, ஆட்டநிர்ணயச் சதி தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை- இந்திய அணிகள் மோதின. அதில், இந்தியா வெற்றிபெற்றது. குறித்த போட்டியில், ஆட்ட நிர்ணயச் சதி இடம்பெற்றதாக, அந்தக் காலப்பகுதியில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மஹிந்தானந்த அளுத்கமகே குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கு, இலங்கை அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் எதிர்ப்பு வெளியிட்டுள்ள நிலையிலேயே, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலகுவதற்கான அறிவிப்பினை விடுத்துள்ளார். 

எமது கொள்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொண்டால், எதிர்வரும் காலங்களில் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. 

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆந்திர மாநிலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிகிச்சை மையமாக இருந்த ஓட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10பேர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெய்ரூட்டில் ஏற்பட்ட மிகப்பெரும் நைட்ரஜன் வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200 ஆக உயர்வடைந்துள்ளது.

சுவிற்சர்லாந்தில் கோடைவிடுமுறை முடிந்து பாடசாலைகளுக்கான புதிய கல்வியாண்டு ஆரம்பமாகவுள்ளன. சுவிஸின் சில மாநிலங்களில் வரும் திங்கட்கிழமை பள்ளிகள் தொடங்குகின்றன.