இலங்கை

3000 இராணுவத்தினரைக் கொன்றதாக தெரிவிப்பதுதான், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிறந்த நாளுக்கு வாழ்த்துக் கூறும் முறையாக என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர கேள்வியெழுப்பியுள்ளார். 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் 71வது பிறந்தநாள் இன்றாகும். அதனை முன்னிட்டு தன்னுடைய ருவிட்டர் பக்கத்தில் மங்கள சமரவீர வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அதில், “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜனாதிபதி அவர்களே. எத்தனை இராணுவத்தினரைக் தாம் கொன்றோம் என்றுகூறி, அதுகுறித்துப் பெருமையடைவதுதான் ஜனாதிபதிக்கு பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கருணா அம்மான் வாழ்த்துத் தெரிவிக்கின்ற முறையா?” என குறிப்பிட்டுள்ளார்.

நாவிதன்வெளி பிரதேசத்தில் மக்கள் கூட்டமொன்றில் உரையாற்றிய கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் “ஆணையிறவில் ஒரே இரவில் இராணுவத்தினரில் 2000, 3000 பேரைக் கொலை செய்தோம்” என வெளியிட்ட கருத்து தென்னிலங்கை அரசியல் பரப்பில் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலகுவதற்கான அறிவிப்பினை விடுத்துள்ளார். 

எமது கொள்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொண்டால், எதிர்வரும் காலங்களில் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. 

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆந்திர மாநிலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிகிச்சை மையமாக இருந்த ஓட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10பேர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெய்ரூட்டில் ஏற்பட்ட மிகப்பெரும் நைட்ரஜன் வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200 ஆக உயர்வடைந்துள்ளது.

சுவிற்சர்லாந்தில் கோடைவிடுமுறை முடிந்து பாடசாலைகளுக்கான புதிய கல்வியாண்டு ஆரம்பமாகவுள்ளன. சுவிஸின் சில மாநிலங்களில் வரும் திங்கட்கிழமை பள்ளிகள் தொடங்குகின்றன.