இலங்கை

சிறுவர்களை ஆயுதப் போராட்டத்தில் இணைத்த குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் என்கிற விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் மைக்கேல் பச்லெட் (Michelle Bachelet) அலுவலகம் டுவிட்டர் பதிவொன்றினை வெளியிட்டுள்ளது. 

விநாயகமூர்த்தி முரளிதரன் யுத்த காலத்தில் புரிந்த குற்றங்களுக்காக விசாரிக்கப்படுவதை கவனத்தில் கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் மைக்கேல் பச்லெட் குறித்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சர்வதேச சட்டத்தின் கீழ் குற்றமாக கருதப்படும் சிறுவர்களை யுத்த நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியமை மற்றும் ஆட்சேர்ப்புச் செய்தமை உள்ளிட்ட காரணங்களுக்காக கருணா அம்மானை விசாரிக்க வேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இவ்விடயத்தில் இலங்கையில் உள்ள அனைவரும் பொறுப்புக்கூறல் விடயத்தில் பதிலளிக்க வேண்டும் எனவும் ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

பரபரப்புக்கு மத்தியில் திருகோணமலையில் இன்று சனிக்கிழமை கூடிய தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம், சுமூகமான முறையில் முடிவுக்கு வந்துள்ளது. 

ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சிக்கு புதியத் தலைமைத்துவம் அவசியம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

ஆகஸ்ட் 15ஆம் திகதியான இன்று இந்தியாவில் சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.